ஆசிய ராணியின் விற்பதில்லை என்று இலங்கை முடிவு?

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 310 கிலோ எடைகொண்ட நீலக்கல் ‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்டிருந்தது. ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது. எனினும் இலங்கை அதிகாரிகளும், அந்த கல்லின் உரிமையாளர்களும் இந்த வாய்ப்பை மறுத்துள்ளனர். பிரான்ஸில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் […]
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான சுற்றுநிருபம்

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிப்பதற்கான சுற்றுநிருபம் இன்று(06) வெளியிடப்படவுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டதை அடுத்து மேற்படி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேவையேற்படின், தமது விருப்பத்திற்கு அமைய 55 வயதில் அரச சேவையாளர்கள் ஓய்வு பெற முடியும் என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் […]
நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது

நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவிடம் இருந்து கடன்பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த போது, கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், நிதியமைச்சர் இந்தியாவிற்கு சென்று கடன் கோரியுள்ள நிலையில், திருகோணமலை எண்ணெய் குதங்கள் தாரைவார்க்கப்படுகின்றன. அரசாங்கத்தின் உண்மை நிலை தொடர்பான விபரங்களை வெளியிடுவோர் பதிவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவ்வாறு முறையற்ற நிர்வாகத்தினால் நாட்டின் பொருளாதாரம் […]
இளைஞர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை

நாட்டில் இளைஞர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று முன்தினம்(03) இடம்பெற்றது. 15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 29 வயதிற்கும் குறைந்த அனைத்து இளைஞர்களுக்கும் இந்த அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுவதுடன், சர்வ தேச ரீதியில் பிலோக் மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பம் ஊடாக இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டிருப்பதாக தேசிய இளைஞர் மன்றம் குறிப்பிட்டுள்ளது. இதில் இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் தகுதி உள்ளிட்ட ஏனைய தகுதிகள் உள்ளிட்ட தரவுகளை கொண்ட வங்கியாக பயன்படுத்த […]
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி, இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 266 ரூபா 30 சதம். விற்பனை பெறுமதி 274 ரூபா 70 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 232 ரூபா 77 சதம் சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]
சோள இறக்குமதி இடைநிறுத்தம்

டொலர் பற்றாக்குறை காரணமாக தேசிய மிருகவள அபிவிருத்திச் சபையினால் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு அவசியமான 1,500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சோளத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குறித்த 1,500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததாக அந்த சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் கமகே தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், டொலர் பற்றாக்குறை காரணமாக குறித்த சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், சோள இறக்குமதி […]
6.9 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த முடியும் என்கிறார் பசில்!

இந்த ஆண்டில் இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்) கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், நடப்பு அரசாங்கத்தினால் குறித்த கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள் இதுவரையில் எவ்வித பிரச்சினையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படுவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார். கடன் செலுத்தப்படும் அதேவேளை, மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை […]