உலகளாவிய இணைய செயலிழப்பு.

உலகளாவிய இணைய செயலிழப்பு அதன் சில மின்னணு அமைப்புகளை பாதித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சிக்கல் தீர்க்கப்படும் வரை எந்தவொரு பரிவர்த்தனையையும் தவிர்க்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு விரைவில் சீராகும் என நம்புகிறோம் என மைக்ரோசப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதனை விரையில் சீரமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் […]
விபத்துக்குள்ளான யாழ் பஸ் – 51 பேர் காயம்.

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 51 பேர் காயமடைந்திருப்பதாகச் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த சரக்கு கப்பலில் பாரிய தீ

குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில் கோவாவிற்கு தென்மேற்கே தீப்பரவல் ஏற்பட்டது. இந்த கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றிச் வந்ததாகவும், வணிகக் கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சீரற்ற வானிலையையும் மீறி தீயை அணைக்கும் பணியை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக இரண்டு ICG கப்பல்கள் கோவாவில் இருந்து தீயை அணைக்கும் முயற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளன
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இணைய முன்பதிவு சேவைகளை பாதிக்கும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களின் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (19) விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி 14:00 மணியளவில், தொழில்நுட்ப கோளாறு முழுமையாக மீளமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நடிகைக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரின் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றவர் நடிகை ஸ்ரீ கோபிகா. அன்பே வா தொடரிலும் நடிகை டெல்டா விலகியதன் பின்னர், அதில் கதாநாயகியாக நடித்தார். மேலும் அவர் பிரபுதேவாவுடன் உல்ஃப் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில், அதன் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளாக வியாசக் ரவி என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்சமயம் அவரை கரம்பிடிக்கவுள்ளார். தற்போது அவரது நிச்சயதார்த்த புகைப்படங்களை […]
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை மது என்று குடித்து உயிரிழந்தவர்களின் கடைசி செல்பி

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற ‘Devon 5’ மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர்.அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கப்பலில் பயணித்த 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான […]
இத்தாலியில் வசிக்கும் தம்பதி பெயரில் யாழில் விவாகரத்து!

வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டத்தரணியின் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் திருமணமாகி இத்தாலியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையில், சில வருடங்களுக்கு முன்னர் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருவரும் இத்தாலியில் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் கணவன், சாவகச்சேரியில் வசிக்கும் தனது சகோதரியிடம், தமக்கு யாழ்ப்பா ணத்தில் திருமணம் நடைபெற்றமையால் யாழ்ப்பாணத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து […]