முச்சக்கரவண்டியில் வந்திறங்கிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி!

அத்துருகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களின் விசேட கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முச்சக்கரவண்டியில் வந்திறங்கினார். இது தொடர்பில் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் வினவிய போது, தேர்தல் சட்டங்கள் அமுலில் உள்ளதால் அந்த சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களைப் பயன்படுத்தாது முச்சக்கர வண்டியில் வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் சட்டங்களை அனைவரும் கடைப்பிடிப்பது நல்ல நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் […]

சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்!

சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசார் மௌலானா,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் […]

இலங்கை, ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம். 

AKD இணையதளம் (akd.lk), தேசிய மக்கள் சக்தியின் கொள்கை நிலையம் மற்றும் தேர்தல் அவதானிப்பு நிலையம் ஆகியன மெய்நிகர் உண்மை அனுபவத்தின் (virtual reality experience) ஊடாக உத்தியோகபூர்வமாக இன்று (27) பிற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. உலகில் ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளரொருவர் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்துவதற்காக AI ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், ஆசியாவில் அரசியல் தலைவரொருவர் தனது கொள்கையை முன்வைப்பதற்காக AI தொழினுட்பத்தை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். நாட்டின் பிரஜைகளுக்கு […]

கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் செல்வதைத் தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாதுகாப்பான புதிய இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

ரணில் பகிரங்க அறிவிப்பு – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளார். காலியில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்து வெல்வோம், காலியில் நாம் பொது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார். அத்தோடு, சவால்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் தலைவன் நான் அல்லன். நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்று, முன்னோக்கிச் சென்றுள்ளதாகவும் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டுவருவதுடன், வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக […]

தொடரும் பாண் விலையின் சர்ச்சை.

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஐ.உடுவர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனவரி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சட்டப்படியான எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை சோதனையிட்டதில், 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு […]

இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்

உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க வர்த்தகர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த விஜயம் அமையப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைய வசதி சேவையை இலங்கையில் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னதாக அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. Starlink செயல்பாடுகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.