நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 85 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

நாடளாவிய ரீதியாக 85 பில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி செயற்பாடுகள் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகச் செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டங்கள் மாவட்டச் செயலாளர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 85 பில்லியன் ரூபாவில் 40 சதவீதமானது மக்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படும். ஏற்கனவே ஏனைய அமைச்சுகளால் மேற்கொள்ளப்படும் நாடளாவிய அபிவிருத்தி […]
வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் மாத்திரம் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. சுமந்திரன்

அரசாங்கம், வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் மாத்திரம் கவனம் செலுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடுமையாக கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது. ஒரு நாடு என்ற வகையில் இந்த சவாலை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட […]
இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது

சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களை நாட்டிலிருந்து கொண்டு செல்ல முயன்ற 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சுங்கத்திணைக்களத்தின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எமிரேட்ஸ் விமானச் சேவையினூடாக சந்தேக நபர்கள் டுபாய் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் நேற்று கைதானதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். அவர்களிடம் இருந்து 95 ஆயிரம் அமெரிக்க […]
வெளிநாடொன்றில் இலங்கையர் தனது 2 பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை.

மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திக்க குணதிலக (40) என்பவரும், மகன் கோஹன் (6), மகள் லில்லி (4) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அவுஸ்திரேலிய பொலிஸாா் தெரிவித்துள்ளனா். மேற்கு அவுஸ்திரேலியா, போ்த் பிரதேசம் எசிங்டன் வீதியில் இந்திக்க குணதிலகவின் வீடு அமைந்துள்ளது. இவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார். நேற்று பிள்ளைகளை அவர்களது […]
தங்க விலையில் திடீர் மாற்றம்

தங்கத்தின் விலை சற்றுக் குறைந்துள்ளது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் கேள்வி உயரும் என்றும், இந்த ஆண்டு தங்கத்தின் கேள்வி மீண்டும் அதிகரிக்கும் என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித் துள்ளது. இன்று இலங்கையில் தங்கத்தின் விலை 22 கரட் ரூபா 1,14,300/- ஆகவும் 24 கரட் ரூபா 1,23,500/- ஆகவும் உள்ளது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 16 ஆயிரம் கிலோ பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 16000 கிலோ பீட்ரூட் தொகை சுங்கப்பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு இறக்குமதி எனக் கூறியே குறித்த பீட்ரூட் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 30 இலட்சம் என சுங்க திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான குளிர்சாதனப் பெட்டிகள் அடங்கிய கொள்கலன்களிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டதுடன் வத்தளையில் உள்ள நிறுவனமொன்றுக்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 53000 கிலோ உருளைக்கிழங்கு தொகையொன்றினையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவை மிகவும் […]
ஆடை தொழிற்துறையை விஸ்தரிக்க நடவடிக்கை

தமது தொழில்துறையினை விஸ்தரிப்பதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறிய மற்றும் நடுத்தர தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர். சிறிய மற்றும் நடுத்தர ஆடை உற்பத்தியாளர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் 26ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்காவுக்கும், சீனவுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக […]