தேங்காயை 75 ரூபாவுக்கு விற்க நடவடிக்கை!

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் தேங்காயை வருடம் முழுவதும் ரூ.75 என்ற நிலையான விலையில் நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. பெருந்தோட்ட மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துள்ளதாக வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேங்காய் விலை அதிகரிப்பால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் தேங்காய்களை […]

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் சிக்கினர்!

நீர்கொழும்பு காவல்துறையினரால் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகுதியுடன் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களை சேர்ந்த 46 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை […]

மத்திய வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள்

இலங்கை மத்திய வங்கி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு இன்றைய தினம் மத்திய வங்கி வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முற்பகல் 10.47 க்கு 200 கிலோகிராம் வெடிப்பொருள் தாங்கிய பாரவூர்தி ஒன்றினை வெடிக்க வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது, 91 பேர் உயிரிழந்ததுடன், 1,400 பேர் […]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றநிலை காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. அத்துடன் அமெரிக்காவின் டப்ளியுவ்.டி. ஐ ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.82 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. விநியோகத்தடை மற்றும் கேள்வி அதிகரிப்பு என்பன காரணமாக கடந்த வாரத்தில் மசகு எண்ணெய்யின், விலை 7 […]

இம்மாதம் 75,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இந்த ஆண்டு ஜனவரியில் நாட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 75,000ஐ தாண்டியுள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை 76,536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதில் 12,368 பேர் ரஷ்யாவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் போலந்து, மாலைத்தீவு மற்றும் கஸ்க்ஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து […]

பெப்ரவரி முதலாம் திகதி முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இதுதொடர்பாக தெரிவிக்கையில், புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை உள்ளடக்கியவகையில் சுமார் 72 சொகுசு ,அதி சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கையில் உள்ள உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி  hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் […]

சதொஸ விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் அரிசி

சதொஸ விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் நேற்று புறக்கோட்டையில் அரிசி மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்தார். இதன் போது அமைச்சர் வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். சம்பா அரிசி, நாட்டரிசி, பச்சையரிசி ஆகியவற்றை முறையே 100, 105, 115 ஆகிய விலைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என வியாபாரிகள் இதன் போது, தெரிவித்தனர். விரைவில் இந்த அரிசி தொகையை சதொஸ […]