குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குடிநீர் போத்தல்களுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி இங்கே ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் […]
துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டால் மேலும் அரிசி விலை குறையும்!

அரிசி விலை தொடர்பில் ஆராயும் நோக்கில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று(29) காலை புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். இதன்போது, மொத்த அரிசி விற்பனையாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், பச்சை அரிசி ஒரு கிலோகிராம் தற்போது 100 ரூபாவுக்கு மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டார். நாட்டரிசி ஒரு கிலோகிராம் 105 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 118 ரூபாவுக்கும் மொத்த […]
அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான புதிய சட்டம்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானால், அதனை சுயமாக சரி செய்யக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித் துள்ளார். அவ்வாறான சந்தர்ப்பத்தில், அவர்கள் முதலில் செய்ய வேண்டியது, வாகனத்தை வீதியின் பாதுகாப்பு வலயத்துக்கு அகற்றி, உடனடியாக 1969 அதிவேக நெடுஞ்சாலை சேவை இலக்கத்துக்கு அழைத்து அவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கூறினார். மாறாக, விபத்துகளை தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்கும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மீது கடுமையான […]
நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கை வெளிவந்தால் அது பெரும் கேள்விக்குறியாகி விடும்

நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கொடுக்க முடியும். ஆனால் அது அங்கே ஒரு பெரிய பிரச்சினை. நான் அதை அமைச்சரவைக்கு வழங்கு வேன்” என்று நிதி அமைச்சர் கூறினார். அவ்வாறான அறிக்கை கிடைத்தால் நல்லது […]
எரிபொருளுக்குத் தேவையான டொலரைக் கண்டறிவதாக ஒப்புக்கொண்டார் கப்ரால்

டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலரை கண்டறியும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மத்திய வங்கியின் ஆளுனர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தேவையான டொலர் தொகையை முன்கூட்டியே அறிவிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் […]
இலங்கை முழுமையாக இருளை அரவணைக் கிறதா?

இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கள்ஆகியவை முரண்பட்டிருப்பதாகத் தென்படுகின்றமை நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது *சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்உலை எண்ணெய் பற்றாக்குறையால் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது *குறைந்தளவு மழைவீழ்ச்சியால் நீர்மின் உற்பத்தியும் சவாலாக உள்ளது *ரந் தெனிகல நீர்த்தேக்கம் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொத்மலைக்கும் கடந்த வாரம் முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. *உலர் வலயத்தில் அமைந்துள்ள வீடுகளின் கூரைகளில் சூரியக்கலன்களை பொருத்துவதே இதற்கு மாற்றாக அமையுமென நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். *2030 […]
இன்றைய நாணய மாற்றுவிகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 61 சதம். விற்பனை பெறுமதி 272 ரூபா 98 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 229 ரூபா 31 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]