10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க விசேட திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை […]

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு

28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல், நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போதுவரையில் மூவாயிரத்து 500 ரூபாவைப் பெற்ற சமுர்த்தி பயனாளர் குடும்பம் ஒன்றுக்கு, நான்காயிரத்து 500 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும். 2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, 3,200 ரூபா கொடுப்பனவும், 2, 500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, ஆயிரத்து 900 […]

இரும்புக்கு பஸ்களை விற்கும் தொழில் அதிபர்

கொரோனா கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பேரிழப்பில் இருந்து மீண்டு வர 10 பஸ்களை கிலோ ரூ.45-க்கு பழைய இரும்பு விலைக்கு விற்கப்போவதாக தொழில் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் ஏராளமாக இருந்தாலும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களும் அதற்கு இணையாக உள்ளனர் என்றால் அது மிகையில்லை. கேரளாவில் கொரோனாவையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் கொச்சியை தலைமையிடமாக கொண்டு ராய் டூரிசம் என்ற […]

இலங்கைக்கு பணம் அனுப்புதல் அதிகரித்திருக்கிறது

தொழிலாளர் பணவனுப்பல்கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதிவுசெய்யப்பட்டிருந்த 271 மில்லியன் டொலரிலிருந்து டிசம்பர் மாதம் 325 மில்லியன் டொலராக பதிவாகியுள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2020 இல் பதிவுசெய்யப்பட்டிருந்த 7 ஆயிரத்து 104 மில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில் 2021இல் 5 ஆயிரத்து 491 மில்லியன் டொலராக விளங்கியதன் மூலம் 22.7 சதவீத வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்தன. வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்காக நாட்டிலிருந்தான மொத்தப் புறப்படுகைகள், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021 டிசம்பர் மாத […]

இலங்கையின் சுற்றுலாத்துறை மீட்சி பாதையில்!

இலங்கையின் சுற்றுலா தற்போது மீட்சிப் பாதையை நோக்கிச் பயணிப்பதாக விருந்தகங்கள் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள நிலையில், நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 89, 506 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதத்தில், நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த […]

கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம்!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின் போது, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் நிதியமைச்சின் தலையீட்டில் துறைமுகத்தில் தேங்கியிருந்த 500 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]

இலங்கை வரும் இந்திய பயணிகளுக்கான அறிவித்தல்!

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, ‘வருகையின் பின்னரான விசா’ (On arrival visa) அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் குறைவடைந்து வருகின்ற நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீரமானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களுள், 42 சதவீதமானோர் இந்திய சுற்றுலாப் பயணிகளாவர். இந்த நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்க வந்ததன் பின்னர், […]