நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

சுமார் 270 மெகாவோட் மின்னுற்பத்தி திறன் கொண்ட கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் மேற்கு முனையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. எனினும், செஜிட்ஸ் மின்னுற்பத்தி நிலையம் மீள புனரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]
பொருளாதாரத்தில் மீட்சி வாகன இறக்குமதி.

நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் செயற்பாடு கடந்த 2020 மார்ச் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் இலங்கைக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]
10.75 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்டார்

2022 ஐபிஎல் மாபெரும் ஏலத்தில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்க 10.75 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவர் ரோயல் செலஞ்சர் பெங்களூரு அணிக்காக இவ்வாறு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2022 ஐபிஎல் மாபெரும் ஏலம், பெங்களூருவில் தற்போது இடம்பெற்று வருகிறது. இதுவரையிலான 2022 ஐபிஎல் மாபெரும் ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 12.25 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி […]
காரைநகர் ஊர்காவற்றுறை பாதை பழுது

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமை யால் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன. குறிப்பாக, ஊர்காவற்றுறைபிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என காரணம்கூறப்பட்டுள்ளது. மேற்படி பாதையில் கேபிள் அறுந்துபோதல், வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைதல் போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்றன. எனினும், பின்னர் […]
வாகன இறக்குமதி பற்றிய நல்ல செய்தி

நாட்டின் பொருளாதாரம் மீண்டதும் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்த நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது மார்ச் 2020 இல் நிறுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழு (EC) அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]
உலக எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதாலும், அமெரிக்க மத்திய ரிசர்வ் வட்டி வீதத்தை உயர்த்தும் போக்கு காரணமாகவும் உலக எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 3.3 சதவீதம் உயர்ந்து 94.44 டொலராகவும் அமெரிக்க டபிள்யூ. டி. ஐ. ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 3.6 சதவீதம் அதிகரித்து 93.10 டொலராகவும் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை பெட்ரோலியத்தின் விலை 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந் துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]
ஆப்கானிஸ்தான் பணத்தை இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அமெரிக்கா முடிவு

தங்களிடம் உள்ள ஆப்கானிஸ்தானின் 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பணத்தை நிவாரணத்திற்கும், இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமாக வெளிநாடுகளில் இருந்த சொத்துக்கள், பணத்தை பல நாடுகள் முடக்கின. சர்வதேச நிதியமும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியை முடக்கியது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்கு சொந்தமாக வெளிநாடுகளில் இருந்த சுமார் 75 […]