இலங்கையில் இணைய இணைப்புகளுக்கு நடக்கபோவது என்ன?

இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நீர்மூழ்கிக் கேபிள் அமைப்பானது உலகின் பல்வேறு நாடுகளுக்கு தேவையான இணைய வசதிகளை இணைக்கிறது. வங்காள விரிகுடாவை அண்டிய கடற்பகுதியில் ஆழ்கடலில் பதிக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி வடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவ்வப்போது கைப்பேசி மற்றும் அகன்ற அலைவரிசை (ப்ரோட்பேண்ட்) இணைய இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கைப்பேசி சேவை […]

கடும் மழை; உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உழுந்து செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இலங்கையில் அதிக உழுந்து உற்பத்தி மாவட் டங்களில் ஒன்றான வவுனியா மாவட்டத்தில் உழுந்து அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையினால் பலர் உழுந்து அறுவடையை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விதைத்து 3 மாதங்களாகக் காத்திருந்து, அறு வடைக்குத் தயாரான உழுந்துப் […]

கொழும்பு துறைமுகத்தில் 2300க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொள்கலன்கள்

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2300 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் தட்டுப்பாட்டால் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்த கர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் அரிசி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியுள்ளதாக அச்சங்கத்தின் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்தார். பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை விரைவில் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் நிதி […]

விலைகள் அதிகரிப்பதால் உணவை குறைக்கின்றனர்

இலங்கையில் பொருளாதாரரீதியில் பலவீனமான நிலையில் உள்ள குடு;ம்பங்கள் உண்ணும் உணவை குறைத்துகொண்டுள்ளன அல்லது சத்துக்குறைந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்கின்றன என ஐநா அமைப்பொன்று தெரிவித்துள்ளது. பொருளாதாரரீதியில் பலவீனமான நிலையில் உள்ள மக்களின் உணவுப்பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலை என்பன எதிர்மறையான தாக்கத்திற்குள்ளாகியுள்ளன என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் தனது சர்வதேச தகவல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை ருபாயின் வீழ்ச்சி எரிபொருள் நெருக்கடி உரநெருக்கடி போன்றவற்றால் […]

31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

இதுவரை 31,600 மெட்ரிக் தொன் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளது. அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 90 ரூபாவுக்கும் சம்பா அரிசி நெல் 92 ரூபாவுக்கும் கீரி சம்பா நெல் 95 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளைகளுக்கு நெல்லை வழங்குவதாயின், நாட்டரிசி […]

விரைவில் இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரம்

எரிபொருள் விலை சூத்திரம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறித்த எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான வரைவினை எதிர்வரும் 21 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கடந்த டிசம்பர் மாதம், 74 டொலராக காணப்பட்ட மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, தற்போது 94 டொலர் வரையில் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பு தொடர்பில், கனியவள […]

தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் […]