எச்சரிக்கை ! 5000 இலங்கை ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது அவதானம்..

கம்பஹா – மினுவாங்கொட பகுதியில் 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 90 வடகொரியா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிட்டம்புவ, பரண வயங்கொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் மேலும் இருவருடன் முச்சக்கரவண்டியில் ஹிக்கடுவை நோக்கி பயணித்த நிலையில், மினுவாங்கொடையில் பொருட்களை கொள்வனவு செய்த போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவருடன் முச்சக்கரவண்டியில் […]

தமிழ் தேசியம் என்ற சொல்லின் அர்த்தமே தெரியாத இலங்கை தமிழ் இளைஞர்கள்! நாடாளுமன்ற தேர்தல் 2024

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள், நெடுங்காலமாக சுயநிர்ணய உரிமை, 13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்களை கோரி வருகின்றார்கள். இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெறுவதற்கு முன்பாகவே, தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம் ஆரம்பமானது. இலங்கையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றும் அரசியல்வாதிகள் தமது பிரசாரங்களில் இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தியே பேசி வருகின்றனர். குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளினால் அரசியல் மேடைகளில் பேசப்படுகின்ற இந்த […]

சுவிட்சர்லாந்தில் முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்

சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. […]

48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு.

48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு ; பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது. எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் […]

பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம்.

பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. U.K.வின் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்தின் தலைவர் பீர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கச்சா அரிசி நெல் அறுவடை மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக சேமசிங்க சுட்டிக்காட்டுகிறார். மேலும் கருத்து தெரிவித்த யு.கே.சேமசிங்க, “பீர் தயாரிக்க கச்சா அரிசி தேவை. ஆனால் பீர் தயாரிக்க தேவையான கச்சா அரிசி நெல் அரிசியில் […]

8888 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான  வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில்  ஈடுபட்டுள்ளனர்

பொதுத்தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளா ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இது மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும்,பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக […]

இலங்கை ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள டோக்கன் எடுப்பது எப்படி?

இன்று முதல் வன்டே சேர்விஸ்/ நோர்மல் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் ஒன்லைன் மூலம் டோக்கன் எடுப்பதற்கு அப்ளை பண்ண முடியும். 2024.11.06 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளின் வசதி கருதி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்படும்.