செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணிக்கும் பாதாள உலக கும்பலுக்கும் தொடர்பு..

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா […]
முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க, நாட்டிலுள்ள முக்கிய விற்பனை நிலையங்கள் நாளை நவம்பர் முதலாம் திகதி முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடப்படவுள்ளது. வியாபார நிலையங்களில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2456/41 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு 3 ரூபாவாகவும், பெரிய கைப்பிடி பைக்கு 5 ரூபாவாகவும் ஆகவும் […]
வடக்கில் குறந்தளவு சனத்தொகை! – இலங்கையின் சனத்தொகை விபரம் வெளியீடு

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை நேற்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத் தொகை 21,763,170 ஆகும். அதாவது, இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் […]
மடுவுக்காக தள்ளிவைக்கப்பட்ட கதவடைப்பை நல்லூருக்காக தள்ளிவைக்க முடியாதா?

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் நடந்து வரும் நிலையில் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள கதவடைப்புக்கு, யாழ்ப்பாண வர்த்தகர்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிலிருந்த சிப்பாய் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை, இராணுவத்தினர் கண்டதும், தப்பியோடிய போது ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அந்த இளைஞனை இராணுவம் அடித்துக் கொன்றதாகவும், இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக கதவடைப்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்தார். அண்மைய தேர்தல் தோல்வியின் […]
பிரித்தானியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞர்

பிரித்தானியாவில் தனது இரு மருமகள்களையும் காப்பாற்றுவதற்காக நீர்வீழ்ச்சியில் குதித்த 27 வயதான மோகன் என்றழைக்கப்படும் மோகனநீதன் முருகானந்தராஜா உயிரிழந்துள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த மரணத்தை விபத்தாக அறிவித்து அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் பிறந்த மோகன் ஒரு விமானி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரால் காப்பாற்றப்பட்ட இரு குழந்தைகளும் அவரின் மருமகள்கள் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரையும் பாதுகாப்பாக மீட்ட மோகன் இறுதியில் […]
மன்னிப்பு கேட்க மாட்டேன் – கமல்

கன்னட மொழி குறித்த தனது அண்மைய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இன்று (30) நிராகரித்துள்ளார். தான் தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன் என்றும் 70 வயதான மூத்த நடிகர் கூறினார். நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அண்மையில் தனது வரவிருக்கும் படமான தக் லைஃப் படத்திற்கான இசை […]
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்றில் மலத்தொற்று

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]