தமிழரசுக்கட்சி கடிதம்: புதிய பெயர், தேர்தல் கட்சியாக பதிவு, பொதுச்சின்னம் …

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்வைத்திருந்த ஆறு நிபந்தனைகளில் இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல் உட்பட மூன்று நிபந்தனை முதற்கட்டமாக ஏற்றுச்செயற்படுவதற்கு தயார் என்று தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரத்தினலிங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் ‘தங்களது 12-05-2026 ஆம் திகதிய கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட […]
கீவ் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: உலகப் பாரம்பரியச் சின்னமான ‘கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா’ மடாலயம் தீப்பற்றியது

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் இல்லாதளவுக்கு மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலை இன்று (15) திங்கட்கிழமை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உக்ரைனின் ஆன்மீக மற்றும் கலாச்சார வரலாற்றின் அடையாளமாகவும், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கும் புகழ்பெற்ற ‘கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா’ குகை மடாலயம் நேரடியாகத் தாக்கப்பட்டு பலத்த சேதமடைந்துள்ளதுடன், பெரும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றையதினம் அதிகாலை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான […]
யாழில் கார்கில்ஸ் food city, உப்புச்சப்பான விசயம்…

கோப்பாயில் அமைந்துள்ள கார்கில்ஸ் food city யில் தரமற்ற உப்பு விற்பனை செய்த காரணத்தால் இருவரிற்கு தண்டத்துடன் ஒன்றரை வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதி பொது சுகாதார பரிசோதகர் எ. ஜோ. எர்ஷன் றோய் அவர்களால் கோப்பாய் சந்தியில் இயங்கும் கார்கில்ஸ் food cityயில் 18.02.2026ம் திகதி உப்பு மாதிரிகள் பெறப்பட்டன. பெறப்பட்ட உப்பு மாதிரிகளின் தரம் தொடர்பில் பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட உப்பானது தரமற்றது […]
பிரித்தானியாவில் வாழும் இலங்கை குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு அமைச்சு உத்தரவு!

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை குடும்பங்கள் பலருக்கு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. அங்குள்ள பராமரிப்பு ஊழியர்களின் குடும்ப விசாக்கள் மீதான அரசாங்கத்தின் கடும் கட்டுப்பாடுகளினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் த கார்டியன் பத்திரிகையின் அறிக்கையின்படி, கடந்த சில வாரங்களில் மாத்திரம் ஐந்து வயதுடைய சிறுவர்கள் உட்பட குறைந்தது ஐந்து பிள்ளைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. […]
ரொக்கெட் வேகத்தில் உயர்ந்த எரிபொருள் விலை

இலங்கையில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அனைத்து பிரதான எரிபொருட்களின் விலைகளும் லிட்டருக்கு 103 ரூபாய் முதல் 155 ரூபாய் வரை பாரியளவில் அதிகரித்துள்ளன. நேற்று நள்ளிரவு (மே 31) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய விலை திருத்தத்துடன், இந்த ஆண்டின் மிக உயர்ந்த எரிபொருள் விலை உச்சத்தை […]
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை இன்று (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை (28) மாலையில் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமி குளியலறை […]
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களுக்கு வரவும்! ஐரோப்ப.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லைச் சோதனை நடைமுறைகளால் ஏற்படும் நீண்ட வரிசைகள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க, பயணிகள் தங்களது விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு, விஸ் ஏர் (Wizz Air) விமான நிறுவனத்தின் தலைவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து வரும் பயணிகள், ஐரோப்பாவிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் தங்களது உயிரியளவுகளை (Biometrics – கைரேகை போன்றவை) பதிவு செய்ய வேண்டிய புதிய Entry Exit […]