பணத்தை அனுப்ப மறுக்கும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்

இலங்கை 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன. இலங்கையின் கடன் தொகையானது 51 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நந்தலால் வீரசிங்க, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் டொலர்களை அனுப்பி வைக்குமாறு கோரி இருந்தார். எனினும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சாதகமான பதிலை வழங்கவில்லை என சர்வதேச ஊடகம் […]
இலங்கைக்கு மேலும் 8 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு

இலங்கைக்கு விரைவில் 8 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் காஸ் கிடைக்க இருப்பதாக லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக வங்கியின் உதவியோடு காஸை இறக்குமதி செய்வதற்கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவிருக்கின்றன. இதற்கமைய இலங்கையில் காஸ் விநியோக நடவடிக்கை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று லிற்றோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தில், இதுவரை 8 இலட்சம் வீட்டுப் பாவனைக்கான காஸ் சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் அடங்கலாக இதுவரை […]
உகண்டாவுக்கு அனுப்பப்பட்டது குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்

2021 ஆம் ஆண்டில், உகாண்டாவில் உள்ள என்டபே சர்வதேச விமான நிலையத்திற்கு வர்த்தக அடிப்படையில் மட்டுமே சரக்குகள் அனுப்பப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. சரக்குகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான பல்வேறு கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விளக்கம் அளித்துள்ளது. 2021 பெப்ரவரியில் உகாண்டாவிற்கு 102 மெட்ரிக் டன் அச்சிடப்பட்ட பொருட்களை அனுப்புவதற்கான கட்டளையை ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பெற்றிருந்தது. இது முற்றுமுழுதாக வணிகச் செயல்முறையாக இருந்தது, இது விமான நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் அந்நிய செலாவணியை ஈட்ட […]
மீண்டும் மின்வெட்டு!

முன்னதாக தீர்மானிக்கப்பட்டவாறு நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் மாத்திரம் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் என்றும், இரவில் மின் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் A முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை […]
கோத்தபாய அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை நாமல்

ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு உரையாற்றி தனது திட்டங்களை தெரிவிக்கவேண்டும மக்கள் அரசாங்கம் குறித்து ஏன் சீற்றத்துடன் உள்ளனர் என்பதை தான் உணர்வதாக தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச இது சீற்றத்திற்கான தருணம் மாத்திரமல்ல தீர்வுகளிற்கான தருணமும் கூட என தெரிவித்துள்ளார். பிரின்டிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் அரசாங்கமும் தங்கள் தி;ட்டங்கள் குறித்து மக்களுடன் அதிக வெளிப்படை தன்மையுடன் இருந்திருக்கவேண்டும்,மக்களிற்கு அவற்றை அதிகளவிற்கு தெரியப்படுத்தியிருக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எங்கள் மீது முன்வைக்கப்படும் பெரும் […]
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை, சதொச நிறுவன ஊடாக பொது மக்களுக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சதொச நிறுவன வலைப்பின்னல் ஊடாக பொது மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெலிசறை, இரத்மலானை ஆகிய பிரதான மத்திய நிலையங்களில் இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான விஷ்வ லொக்குகமகே தெரிவித்தார். இதற்கமைவாக ,சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். சகல சதொச விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் திறக்கப்படுமென்றும் அவர் கூறினார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]
மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் நீடித்து நிலைக்கின்ற தாக்கம், உலக அரசியல் சமமின்மைகள் அத்துடன் நாட்டின் பேரண்டப் பொருளாதார சமமின்மைகள் காரணமாக தற்போது இலங்கை சமூகப் பொருளாதார மற்றும் நிதியியல் இடர்பாடுகளை எதிர்கொண்டு,ள்ளமை நாட்டு மக்களுக்கு இன்னல்களைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் மேற்குறித்த நிலைமையினை கையாள்வதற்கு, நாட்டின் படுகடன் கடப்பாடுகளை முனைப்பாக முகாமைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், ஏனைய நாடுகளிடமிருந்து உடனடி நிதி உதவியினை நாடுதல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றுக்காக பன்னாட்டு நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல் உள்ளடங்கலாக பல […]