ஸ்ரீலங்காவில் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில்

போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அது குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. கம்பஹா – தாரலுவ பகுதியில், 29 வயது நபரிடமிருந்து, 1,000 ரூபா நாணயத் தாள்கள் 34 உம், சில 5,000 ரூபா நாணயத்தாள்களும் நேற்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அத்துடன், குறித்த நபர் போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்திய, கணினி உள்ளிட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் […]
21 விமானங்களை நீண்ட கால குத்தகைக்கு கோரும் ஸ்ரீலங்க

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 21 விமானங்களுக்காக நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 27 விமானங்களைக் கொண்டிருந்தது, அது தற்போது 24 ஆகக் குறைந்துள்ளது. அத்துடன், குத்தகைக் காலம் நிறைவடைந்து வரும் விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை பெற்றுக் கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏ330-200 அல்லது ஏ330-300 ரகங்களைச் சார்ந்த 10 எயார்பஸ்கள் […]
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார் எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோல் வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]
திங்கள் முதல் வழமைக்கு திரும்புமென லிட்ரோ அறிவிப்பு

எரிவாயு உற்பத்தி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. உலக வங்கியின் உதவியுடன் 10 மில்லியன் டொலர் எரிவாயு இறக்குமதியைப் பெற்றதாக லிட்ரோ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் கீழ், எதிர்காலத்தில் 8,500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு வழங்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் நிலையான எரிவாயு விலைகள் இல்லாததாலும், கடந்த இரண்டு மாதங்களாக போதிய நாணயக் கடிதங்கள் வழங்கப்படாததாலும், பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததாலும் தற்போது அனைத்து […]
இலங்கை சீனாவை நம்பியிருக்கும் நிலையை முற்றாக குறைப்பதற்கு இந்தியா முயற்சி

தனது தென்னிந்திய அயல்நாடு சீனா மீது தங்கியிருக்கும் நிலையை முற்றாக குறைப்பது குறித்து புதுடில்லி ஆர்வமாகஉள்ளது என தரப்பொன்று தெரிவித்தது. – இந்தியா கொழும்பிற்கு மேலதிகமாக 2 பில்லியன் டொலரை வழங்க தயாராகவுள்ளது என புதுடில்லிவட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கைக்கு உணவு எரிபொருள் போன்றவற்றை வழங்கும் அதேவேளை இந்தியா 2 பில்லியன் டொலரை வழங்க தயாராகவுள்ளது என ஐந்து தரப்பினர் தெரிவித்தனர் . . 1948 சுதந்திரத்தின் பின்னர் தனது […]
தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகாிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1.1 சதவீத வளர்ச்சியுடன் 1945 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com […]
டீசல் தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கை வருகிறது

இந்திய கடன் எல்லை உதவி திட்டத்தின் கீழ், இன்று மேலும் ஒரு தொகுதி டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. இதன்படி, 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 265,000 மெற்றிக் டன் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் அல்லது 22 ஆம் திகதிகளில் 37, 000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பல் நாட்டை […]