எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளன.

40, 000 மெட்ரிக் தொன் டீசலும் 37.000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் இவற்றில் இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எரிபொருள் விநியோக நடவடிக்கை இன்றும் இடம்பெறுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளின் பரிந்துரைகளின் கீழ் டீசல் வழங்கப்படுகிறது. போத்தல்கள் மற்றும் கலன்களில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கலன்களில் எரிபொருளைக் கொள்வனவு செய்து அவற்றை வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடை […]
தமது எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை

தமது எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று மதியம் முதல் எரிபொருள் விநியோகத்தை வரையறைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் விநியோகம் குறித்து, எமது செய்திச் சேவை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் வினவியது. இதன்போது பதிலளித்த அதன் பேச்சாளர் ஒருவர், தமது நிறுவனத்தின் எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, காவல்துறையினரும், நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன. 12.5 கிலோகிராம் எடைக்கொண்ட 177 கொள்கலன்களும், 5 கிலோகிராம் எடைக்கொண்ட 28 கொள்கலன்களும், 2.5 கிலோகிராம் எடைகொண்ட 25 கொள்கலன்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த எரிவாயு […]
பதவி விலகினார் லிட்ரோகாஸ் தலைவர்

அமைச்சர் – அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை குறுகிய அரசியல் இலாபமீட்டும் நடவடிக்கைகளால் பாதிப்பு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தேசரஜெயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். லிட்ரோ காஸ் நிறுவனத்தில் ஊழல் முடிவிற்கு கொண்டுவரப்படுவதை உறுதி செய்வதற்காக எடுத்த நடவடிக்கைகளை அவர் வர்ணித்துள்ளார். தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ஆதரவை வழங்கியபோதிலும் உரிய அமைச்சரோ நிதித்துறை அதிகாரிகளோ உரிய ஆதரவை […]
உடன் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு மட்டுப்பாடு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று மதியம் ஒரு மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், உந்துருளிகளுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், மகிழுந்துகள், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 5,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும், பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் […]
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை – இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம்

850 ஏக்கர் அடர்ந்த காட்டில் 85 பாழடைந்த எண்ணெய் டேங்குகள் மற்றும் ஒரு இயற்கையான சூழலில் துறைமுகம். இந்த இடம் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் அந்த இடம் இப்போது பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் இருப்பிடமாக உள்ளது. மேலும் மரங்களை வெட்டுவதற்கு அரசாங்க அனுமதி தேவை. ஒரு நாள் அது இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கியமானதாகும். அதே வேளையில் இந்தியாவிற்கு கூடுதல் இருப்புத் திறனைக் கொடுக்கும். திரிகோணமலை எண்ணெய் டேங்க் தொழிற்சாலை அமைக்கஇ இந்தியா ஒப்பந்தம் […]
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கும்?

எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடையும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன வெளிப்படுத்துகிறார். பெட்ரோலியம், மருந்து, உணவு உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மேலும் மோசமடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது 100 மில்லியன் டொலர் அளவே வெளிநாட்டு கையிருப்பு மாத்திரமே இருப்பதாகவும், அதனை கொண்டு எதுவும் செய்ய முடியாது. இதனால் எதிர்காலத்தில் வட்டி வீதம் 25 வீதம் வரை உயரலாம். புற்று நோயாளர் ஒருவரின் கை, […]