தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 98 டொலர்களினால் அதிகரித்து 1,974 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலையங்கள் கடந்த 12ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன. எனினும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தங்கத்தின் விலை 100 டொலரால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வார ஆரம்பத்தில் இலங்கையில் ஒரு பவுண் 24 கரட் தங்கம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் […]
திங்கட்கிழமை எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிப்பொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு விடுமுறையில் சென்ற எரிப்பொருள் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகளில் குறிப்பிடத்தக்க அளவானோர் சேவைக்கு சமூகமளித்துள்ள நிலையில் கனியவள கூட்டுத்தாபன எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிப்பொருள் விநியோக நடவடிக்கைகள் ஓரளவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஏ.எம். அதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். பெற்றோலிய கூட்டுத்தாபன சேவையாளர்கள் மற்றும் எரிப்பொருள் […]
நாட்டை ஒருவாரகாலம் முடக்குவதற்கு ஆலோசனை !

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் இலங்கையின் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் ,ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் இதுதொடர்பில் இன்றுமாலை அறிவிப்பு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]
கைவிசேஷம் கொடுக்க மறுத்த வெளிநாட்டவர் மீது தாக்குதல்!

மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை தனக்கு கைவிசேஷம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் சிலருக்கு கைவிசேடம் வழங்கியுள்ளார். இதை கேள்வியுற்று மதுபோதையில் சென்றவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு கோரினார். இதன்போது கைவிசேடம் கொடுத்தவர் நாளை காலை வருமாறு கோரினார். இதன்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தாக்குதலால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் […]
திருகோணமலை துறைமுகதின் ஊடாக சரக்கு கப்பல்களை இலகுவாக கையாள முடியும்

திருகோணமலை இயற்கை துறைமுகதின் ஊடாக சரக்கு கப்பல்களை இலகுவாக கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கப்பல்களை பராமரித்தல் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகம், சர்வதேச ரீதியாக நீண்ட இயற்கை துறைமுகங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கப்பல் துறையை சேர்ந்தவர்கள் தமக்கான சேவைகளை அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் இந்த துறைமுகத்தின் ஊடாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட வேண்டிய கப்பல்கள், முன்னர்போல வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய […]
மூடப்படும் கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என […]
இன்று 2 ஆயிரத்து 100 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இ.போ. ச திட்டம்

தமிழ், சிங்களப் புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், கொழும்பு உட்பட பிரதான நகரங்களுக்கு மீண்டும் திரும்புவதற்காக இன்று தொடக்கம் 2 ஆயிரத்து 100 பஸ் கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த பஸ்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபை வழமையாக 1,500 பஸ்களை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினாலும் இம்முறை 600 பஸ்களை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். […]