பொருளாதார, அரசியல் ஸ்திரமே தேவை – நாமல்

நாட்டின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு முன்னதாக பொருளாதார அரசியல் ஸ்திரமான நிலைமை உருவாக்கப்படுவதே பிரதான தேவையாக உள்ளதென பொதுஜனபெரமுனவின் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் இட்டக்கட்டப்பட்ட பொய்கள் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சுப்பதவியை எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார். சமகால நிலைமைகள் தொடர்பில் வீரகேசரியிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எரிபொருட்கள் […]
பொலிஸ் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத் தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார். எனினும் குறித்த இணையத் தளமானது உடனடியாக சில மணி நேரங்களுக்குள் வழமையான செயற்பாட்டுக்காக, மீட்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவை வீரகேசரிதொடர்புகொண்டு வினவிய போது, பொலிஸ் இணையத் தளத்தில் தடங்கல்கள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார். அது தொடர்பில் விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றினை வெளியிடுவதாகவும் அவர் […]
லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 338 ரூபாவாகும். அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 367 […]
கொழும்பு பங்கு பரிவர்த்தனை தற்காலிகமாக மூடப்பட்டமை சர்வதேசத்திற்கு மோசமான சமிக்ஞை

சர்வதேச திறந்த பொருளாதாரத்திற்கு தூணாக விளங்கும் கொழும்பு பரிவர்த்தனை நடவடிக்கைகள் ஒரு வார காலத்திற்கு அதாவது இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது. இது சர்வதேசத்திற்கு மோசமான சமிக்ஞையாக அமைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மறுபுறம் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது போன்றோர் தோற்றப்பாட்டை காட்டுவதாகவும் சர்வதேச பார்வையில் இது பாரியதொரு தாக்கத்தை செலுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் மூலம் வர்த்தகத்திற்கு பாரிய நெருக்கடி நிலைமை தோன்றியிருப்பதை சர்வதேசத்திற்கு புலப்படுத்துவதாக உள்ளது என்றும் […]
இலங்கையின் கணிப்பீடுகளையும் மேற்கொள்ள முடியாது – உலக வங்கி

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து எந்தவிதமான கணிப்பீடுகளையும் மேற்கொள்ள முடியாது உள்ளதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் ரிமர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தான் போல, இலங்கையையும் வளர்ச்சி கணிப்பீடுகள் எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஸ்த்திரமான முடிவினை மேற்கொள்வது கடினமான விடயம். இந்த ஆண்டு 2.4 சதவீதம் மட்டுமே பொருளாதார வளர்ச்சியாக பதிவாகியுள்ள நிலையில் தற்போதைய ஸ்திரத்தன்மையற்ற நிலையில் […]
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை எப்போது மீண்டெழும்?

நாடு மிகவும் பலவீனமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார். நேற்று ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் இன்று (17) அதிகாலை வோஷிங்டன் நோக்கி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ […]
யூரியா இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி

எதிர்வரும் போகங்களுக்கு தேவையான 37,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உரத்தொகையில் 7,000 மெட்ரிக் தொன் உரம் ஏற்கனவே தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா குறிப்பிட்டார். 12,000 மெட்ரிக் தொன் யூரியாவை எதிர்வரும் நாட்களுக்குள் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இறக்குமதி செய்யப்படும் உரம், தனியார் துறையின் தலையீட்டுடனேயே நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20,000 மெட்ரிக் […]