IMF ஐ முன்னதாகவே நாடியிருக்க வேண்டும்: இரசாயன உரம் நிறுத்தப்பட்டமை தவறு – ஜனாதிபதி

இலங்கை மிகவும் முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்க வேண்டும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமனத்தின் பின்னர் நிகழ்த்திய விசேட உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்காதது தவறு என்றும், அரசாங்கம் மீண்டும் இரசாயன உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதுதொடர்பில் நான் […]

சீனி வரி மோசடியால் கிடைக்காமல் போன வருவாயை மீள அறவிட வேண்டும்

சீனி வரி மோசடியின் ஊடாக அரசுக்கு கிடைக்காமல் போன வருவாயை குறித்த தரப்பிடம் அறவிட வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் அதனுடன் தொடர்புடைய தரப்பிடம் இருந்து அறவிடப்பட வேண்டும் என கணக்காய்வாளர் திணைக்களம் தமது அறிக்கையின் ஊடாக பரிந்துரைத்திருந்தது. சீனி மீதான இறக்குமதி வரியை குறைத்து பெரும் இலாபம் ஈட்டிய இறக்குமதியாளர்களிடம் இருந்து உரிய தொகையை வசூலிக்க வேண்டும் என […]

இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை

இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் நான்காவது கொவிட் தடுப்பூசி மாத்திரையை வழங்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]

ஈராக், சிரியா, லிபியா, லெபனான் கவிழ்க்கப்பட்டதால் உருவாகியுள்ள நிலைமையை மறக்ககூடாது.

மக்களால் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எந்த குழுவிற்கும் அதிகாரம் வழங்கும் முறைமை இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு பொறிமுறை இருந்தால் அதனை முன்வைக்குமாறு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் காட்டினால் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். […]

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?

பல பெறுமதி மிக்க அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலரை உடனடியாகத் திரட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக் களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவை அடங்கும். இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை […]

புதிய அமைச்சரவை பதவியேற்பு!

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது. ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றனர். அதன்படி, தினேஷ் குணவர்தன பொதுசேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும், டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகவும், ரமேஷ் பத்திரண கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், திலும் அமுணுகம போக்குவரத்து மற்றும் […]

டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற […]