இலங்கை வங்கித் துறைக்கு சாதகமான சூழல் – ஃபிட்ச் ரேட்டிங்!

வெளிநாட்டுக் கடன்கள் ஊடான அழுத்தங்கள் குறைக்கப்படும் போது, நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் எனவும், ஃபிட்ச் ரேட்டிங்க் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வங்கிச் செயற்பாடுகள் கடந்த பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்தன. எனினும் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக அந்தச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் விளைவால் ஏற்படுகின்ற இறையாண்மை அழுத்தக் குறைப்பின் காரணமாக, வங்கிகளின் செயற்பாட்டுச் சூழ்நிலை இலகுபடுத்தப்படும். […]

ரஜினிகாந்த் அடுத்த காமெடி பீஸ்!

தமிழ் சினிமாவில் 120 படங்களுக்கும் மேல் நடித்தும் 60 சீரியல்களில் நடித்தும் 2,500 மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமாகியவர் கவிதாலயா கிருஷ்ணன். பொய்க்கால் குதிரை என்ற படத்தில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமாகிய கிருஷ்ணன், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கமல், ரஜினி பற்றிய ஒருசில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், கமல் ஹாசனை தமிழ் சினிமா கொண்டாடவில்லை. அவர் நம்முடைய பொக்கிஷம். அடுத்த தலைமுறையினர் ரஜினிகாந்தையே மறந்துவிடுவார்கள். அவருக்கு விழா […]

திருமண முறிவு குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உருக்கமான பதிவு!

தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாக ஏ.ஆர். ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார். மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் எக்ஸ் தள பக்கத்தில் தனது விளக்கத்தை பதிவு செய்தார். அதில், தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாகத் தெரிவித்துள்ளார். கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், இதய […]

யாழ் ஊசி கட்சி MP நாடாளுமன்றில் இருந்து விலக்கப்படுவார்

யாழ் ஊசி கட்சி MP விரைவில் நாடாளுமன்றில் இருந்து விலக்கப்படுவார். நாடாளுமன்ற சேவியர்களுடன் முதல் நாளே தான் MP என்று மோதியாச்சு! அடுத்த கட்டம் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்ற தெரியாத காரணம் மற்றும் சட்ட திட்டங்களை சரியாக விளங்கி புரிந்து நடக்கத் தெரியாது என்று தடை உத்தரவு வரும் . அப்போது அவரின் தங்கம் கௌசல்யா MP யாக போகும் வாய்ப்பு விரைவில் வரும் என்பதை ஒரு எதிர்வு கூறலாக தருகிறேன். என்னவொரு கோமாளியை வடக்கு மக்கள் […]

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார் […]

சுவிஸ் நாட்டு பெண்ணுக்கு இலங்கையில் காத்திருந்த பயங்கரம்..!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில், வீடொன்றில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பெண் பிரஜையை கடுமையாக தாக்கிவிட்டு, இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 10 கிராம் தங்க சங்கிலி, 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயத்தாள்கள் என்பவற்றை கும்பலொன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புதன்கிழமை (20) மட்டக்களப்பு, கல்லடி, பேபிசிங்கம் வீதியில் அமைந்துள்ள வீட்டில் இந்த தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை […]

காதலருடன் கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தற்போது படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டே வருகிறார். இதுக்குறித்து பல தகவல்கள் பரவி வர, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் கீர்த்தி விரைவில் தன் காதலரை திருமணம் செய்யவுள்ளார். இவர்கள் திருமணம் கோவாவில் நடைப்பெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தன் காதலருடன் கீர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தி வெளிவந்து செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆன்டனி தட்டில் என்பவரை இந்த டிசம்பரில் திருமணம் […]