செல்வம் வென்றதற்கும், சித்தர் தோற்றதற்குமான சங்குவின் சுவாரஸ்ய பின்னணி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை அடித்த போதும், வடக்கில் அதனை ஓரளவு கட்டுப்படுத்தக் கூடிய வாய்ப்பிருந்தது. அதை தமிழ் கட்சிகள் கோட்டை விட்டன. இதனால் வடக்கு கிழக்கில் அதிக ஆசனம் பெற்ற கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி மாறியது. வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய […]
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய அரசாங்கம் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதனையும், மக்களுக்கு […]
சபாநாயகராக பிமல் ரத்நாயக்க நியமனம்!

10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக கலாநிதி அமைச்சர் நளிந்த திஸாநாயக நிமிக்கப்பட்டுள்ளார்.
எம்.பி பதவியை இழந்த சுமோ! தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் சத்தியலிங்கத்திற்கு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) தேசியப்பட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு (Pathmanathan Sathiyalingam) வழங்குவதற்கு கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா (Vavuniya) ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்றது. இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றது. அரசியல் குழு தீர்மானம்விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னி தேர்தல் […]
சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமறுத்த சுமந்திரன்!

வவுனியாவில் (Vavuniya) தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் (P. Sathyalingam) மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் (S. Sivamohan) வழங்க முற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் (M. A. Sumanthiran) வாங்கமறுத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் […]
அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள்.

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். NPP தேசிய மக்கள் சக்தி சார்பில்அப்புத்தளை தொகுதியில் பதுளை மாவட்டத்திற்கான வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Ambika Samuelநுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Selvi Selvi கடந்த 1977ஆம் ஆண்டில் முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த […]
நல்ல கருத்து! மட்டக்களப்பாரைப் பார்த்து திருந்துங்கள்…..

மட்டக்களப்பாரைப் பார்த்து திருந்துங்கள் என யாழ்பாணத்தாரை இகழும் பதிவுகள் பல சமூக வலைத்தளங்களில் தென்படுகின்றன. தமிழருக்கு எப்படி யாழோ அதே போல சிங்களவர் பரவபலாக வாழும் மாத்தறையில் ஒரு தமிழ்ப் #பெண் அதிகப்படியான அதாவது 148,379 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். யாழில் NPP எந்தவொரு சிங்கள வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை. அதே சமயம் ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளரை மாத்தறையில் தவிர்க்கவும் இல்லை.களங்கள் மாறும் பொழுது அதற்கேற்ப கொள்கைகளும் மாறவேண்டும். அதுவே சிறந்த தலைமைத்துவத்திற்கு அழகு. […]