தான் விலகப்போவதில்லையென மஹிந்த இன்றும் அறிவிப்பு

பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவடைந்த ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பதவி விலகல் தொடர்பான தமது நோக்கத்தை நாடாளுமன்றத்தில் அறிவிப்பாரென முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், அந்த அறிவிப்பினூடாக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை […]
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 350 ரூபா 05 சதமாகவும், விற்பனை விலை 362 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. […]
50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை

நாட்டில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நிதியமைச்சர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஆற்றிய விசேட உரையின் போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை சுதந்திரத்தின் பின்னர், பாரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கியுள்ளோம். இன்று எரிவாயு, மருந்து தட்டுப்பாடு மற்றும் மின்தடை குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம். இதனை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால், இது […]
தாய்லாந்து நிறுவனத்துடனான ஒப்பந்த நடவடிக்கைகள் ஆரம்பம்

அடுத்த வருடத்திற்காக, இலங்கைக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த உடன்படிக்கை இந்த வாரத்திற்குள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய […]
உச்சபட்ச சில்லறை விலை விற்பனையாகும் விலையை விட அதிகம்

அரிசிக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலை, தற்போது சந்தையில் அரிசி விற்பனையாகும் விலையை விடவும் அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் எமது செய்திச் சேவை வினவிய போது கருத்து தெரிவித்த அரிசி உற்பத்தியாளர்கள், நெல்லின் தற்போதைய விலையை கருதிக்கொண்டு வர்த்தக அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைய, இந்த உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வரையில் அரிசிக்காக உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் […]
இலங்கையில் குறுகிய காலத்தில் 3279 தற்கொலைகள்!

கடந்த ஆண்டுகளை விட 2021 இல் தற்கொலை செய்து கொண்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டில் 2632 ஆண்கள் மற்றும் 647 பெண்கள் என மொத்தமாக 3279 தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் அண்மைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தற்கொலைகளில் பெரும்பாலானவை குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டவையாகும். 2021ஆம் ஆண்டில் குடும்பத் தகராறு காரணமாக 614 பேரும், நாட்பட்ட நோய்களால் 430 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் 2021 ஆம் ஆண்டில் பொருளாதாரப் […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயில்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடைமேடை ஒன்றில் இருந்து புறப்படும் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயில்/அணுகல் முறை தொடர்பான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் பல பல நீட்டிப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, நடைமேடை ஒன்றின் குறுக்கே புறப்படும் பயணிகளுக்கு டிஜிட்டல் கேட்வே/அணுகல் முறைி அறிமுகம் செய்வதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்னோடித் […]