சீனாவிடமிருந்து அவசர மானியமாக மேலும் 300 மில்லியன்

அவசரமாக மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் நிதியை அவசர மானியமாக சீனா வழங்கவுள்ளது. அதற்கமைய, நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பதற்கு சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் அவசர மானிய தொகை சுமார் 500 மில்லியன் யுவானாக அதிகரிக்குமென இலங்கைக்கான சீனத் தூதரகம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. இது அண்ணளவாக 76 மில்லியன் அமெரிக்க டொலராகும் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள […]
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பணவனுப்பல் சிறிய அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதம் முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பணவனுப்பல் அளவு சிறிய அதிகரிப்பை காட்டியுள்ளது. மார்ச் மாதத்தில் 318.4 மில்லியன் டொலர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, முதல் காலாண்டில் 782 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு அனுப்பப்டடுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த தொகை கடந்த ஆண்டில் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 58 சதவீத வீழ்ச்சியாகும் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ […]
இந்திய கடன் எல்லை வசதி கீழான பொருள் ஒதுக்கீட்டில் சீராக்கம்

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியின் கீழான பொருள் ஒதுக்கீட்டில் சீராக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னதாக கைத்தொழில் மற்றும் மூலப்பொருளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கிடப்பட்டிருந்தது. அது தற்போது, 260 மில்லியன் அமெரிக்க டொலராக சீராக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலராக ஒதுக்கிடப்பட்டிருந்த உணவுக்கான ஒதுக்கீடு 180 மில்லியன் அமெரிக்க டொலராகவும், சீராக்கம் செய்யப்பட்டுள்ளது. மருந்து பொருட்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் […]
யாழ் மதுபான சாலையில் போத்தல் குத்தில் இளைஞன் உயிரிழப்பு – நேரடி CCTV காணொளி

மதுபான சாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் திக்கம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த குணசேகரன் குணசோதி (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மது அருந்திய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றி இரு குழுவினரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன் போது ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை உடைத்து […]
துறைமுகங்களின்செயல்பாடுகளும் வழமைபோல இடம்பெறுகின்றன

நாடளாவிய ரீதியாக உள்ள சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் தற்போது வழமைபோல மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் தெற்காசிய நுழைவாசல் இறங்குதுறை, சர்வதேச கொள்கலன் இறங்குதுறை மற்றும் ஜெயா கொள்கலன் இறங்குதுறை என்பன வழமைபோல கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, துறைமுக தொழிலாளர்கள் கடமைக்கு வரும் வகையில், துறைமுகங்களுடனான போக்குவரத்து வசதியும் தற்போது வழங்கப்படுவதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]
மின் உற்பத்தி மையத்தில் தொழிநுட்ப கோளாறு

நுரைச்சோலை மின் உற்பத்தி மையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதன் திருத்தப் பணிகள் 5 நாட்கள் வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக […]
மதுவரி திணைக்களத்தின் அறிவித்தல்

உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மதுவரித் திணைக்களம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மதுவரித் திணைக்கத்தின் பேச்சாளர் கபில குமார சிங்க இதனைக் குறிப்பிட்டார். திருத்தப்பட்ட விலை இன்மையால் மதுபானசாலைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மதுவரித் திணைக்களத்திற்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பான அறிவித்தல் […]