இந்தியாவிலிருந்து 1,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

இந்திய கடன் வசதியின் கீழ் கடந்த சில நாட்களில் 1,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் சலுகை விலையில் விநியோகிப்பதற்காக இதுவரை சுமார் 80,000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகா பெரேரா தெரிவித்தார். குறித்த அரிசித் தொகை நாடளாவிய ரீதியிலுள்ள சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் பொன்னி […]
பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால் உதவுவதற்காக, 1999 சுவசெரிய சேவை இலக்கத்தினூடாக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சினூடாக இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நோயாளி ஒருவருக்கு ஏதேனுமொரு மருந்தினை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுமாயின், 1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்பின்னர் குறித்த நோயாளிக்கு […]
துரிதமான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம் காண்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம்

முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம்; காண்பதற்காக உப குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 10. துரித முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காணல் நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக துரிதமாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காண்பதற்காக கீழ்வரும் அமைச்சர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா அவர்கள் வெகுசன ஊடக அமைச்சர் […]
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கொடுப்பனவு தொகை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைவாக சமுர்த்திஇ வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தற்போது வழங்கப்படும் கொடுப்பனவு தொiகை பொதுவாக ரூபா 2500.00 வினால் அதிகரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 07. நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கல் […]
இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி

இலங்கை கொண்டுள்ள வெளிநாட்டு நாணயத்தில், தற்பொழுது பயன்படுத்தக்கூடிய தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழு சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தொடர்பாக நிதி அமைச்சர் இன்று (04) பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் பொழுதே இந்த விடயத்தை குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பான நிகழ்ச்சி நிரலை தொடர்வதற்கு மேலும் சுமார் 6 மாத […]
டொலரின் விற்பனை விலை 371 ரூபாவாக உயர்வு

உரிமம் பெற்ற தனியார் வங்கிககள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 371 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. அதன் கொள்முதல் விலை தற்போது 360 ரூபாயாக காணப்படுகிறது அதேநேரம், பிரித்தானிய Pounds ஒன்றின் விற்பனை விலை 465 ரூபாவாகவும் கொள்வனவு விலை 434 ரூபாவாகவும் காணப்படுகின்றது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]
2022ஆம் ஆண்டு இலங்கை பின்னோக்கி தரப்படுத்தல்

2022ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர சுட்டியில், இலங்கை 19 இடங்கள் பின்னோக்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய நாளில் அமைந்த உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, 2022ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுந்திர சுட்டியை வெளியிட்டுள்ளது. 180 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டு 127ஆவது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு 146 ஆவது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 142 ஆவது இடத்தில் பதிவாகியிருந்த […]