ஓசிக் குடிக்கு ஆசைப்பட்டு விமானத்தில் சிக்கிய பரிதாபம்! – யாழ்ப்பாண கனடாகறார்.

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (26) மாலை பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறி ஷியாமலி வீரசிங்க என்ற 55 வயதான பெண், தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். இங்கிலாந்து மற்றும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையுடன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பன்னிபிட்டியவில் வசிப்பவர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் லண்டனில் இருந்து செவ்வாய்க்கிழமை (26) மதியம் […]
மனைவியின் வாயை வெட்டிய கணவன்!

கணவனுக்கு எதிராக மனைவி செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போது, கணவன், மனைவியின் கழுத்தையும் வாயையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம், மாவனல்ல பொலிஸில் கடந்த 26ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. மறைத்து வைத்திருந்த பேப்பர் கட்டரால் 21 வயதான மனைவியை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அந்த யுவதி, மாவனல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், 39 வயதுடைய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவனெல்லையில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயே காயமடைந்துள்ளார். […]
வெள்ளத்தில் மூழ்கிய நல்லூர்!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் ஆலய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம்.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் […]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து மக்களை மீட்க உதவும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் வழிகாட்டுதலில், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவசர உதவிகளை மேற்கொள்ள இடருதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு தயாராக உள்ளது. யாழ் மாவட்ட தொடர்புகளுக்கு:- மானிப்பாய்தனகோபி – 077 925 8745உஷாந்தன் – 077 164 1413 நல்லூர்துசி- 076 804 6435ஜனா :- 077 524 8450விசாகன்:- 075 541 7577 வட்டுக்கோட்டைசபேசன்:- 077 285 0554சசிதரன்:- […]
ஏன் இந்த நிலைமை?!

கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரி வடக்கு மாகாண நிலையத்தில் தொழிற்பயிற்சி பெறுகின்ற மாணவர்களில் 95 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது மிகவும் கவலைக்குரியது. வடக்கு மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களே 95 வீதமானவர்கள் இங்கு தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் தொழிற்பயிற்சியின் பின்னர் பல்வேறு நிறுவனங்களில் தொழில் வாய்ப்பினை பெற்று சென்றுவிடுகின்றனர். பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பினையும் பெற்றுள்ளனர். ஆனால் வடக்கு இளம் சமூகம் இங்கு கற்பதற்கு […]
யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஸ்ய கூலிப் படையில் இணைப்பு!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அங்கு தொழில் நிமித்தமாக செல்ல முயற்சித்துள்ளார்.அந்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் […]