சத்தம் இல்லாமல் ஒரு சம்பவம்…

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் இறுதியாக நேற்றிரவு (28) வெளியானது.

“எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என அட்டகாசமான வரிகளுடன் இந்த டீசர் ஹொலிவூட் பட தரத்துக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் மற்றும் அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த 2 ஆண்டுகளாக அநேகமான தடைகளை தாண்டி உருவாகி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் டீசர் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றிரவு 11.08 மணியளவில் வெளியாகியுள்ளது.

இதனால், உற்சாகம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள், மகிழ் திருமேனி அஜித்தை வைத்து தரமான சம்பவம் செய்துள்ளார் எனக் கூறி டீசரை வைரல் ஆக்கும் முயற்சியில் நேற்றிரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

குட் பேட் அக்லி பொங்கல் ரிலீஸ் ஆகும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்து வந்த நிலையில், அஜித் குமார் முதலில் விடாமுயற்சி படம் வரட்டும் என முடிவு செய்து அந்த படத்தின் பேட்ச் வொர்க்கையும் முடித்த நிலையில், தற்போது பொங்கல் 2025 ஆம் ஆண்டு விடாமுயற்சி தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கார் சேஸிங், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகல் டீசரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம் ஹாலிவுட் த்ரில்லர் பாணியிலான காட்சியமைப்புகளும் நம்பிக்கை அளிக்கின்றன.

எனினும் டீசரை இன்னும் சற்றே சுவாரஸ்யமாக கட் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறவைக்கும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் டீசரில் இல்லை.

அஜித் வழக்கம்போல ஸ்டைலிஷ் ஆன லுக்கில் இருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரமாக சொல்லப்பட்ட ஆரவ் டீசரில் இடம்பெறவில்லை.

அநேகமா முதல் காட்சியில் அர்ஜுன் குழு இழுத்துப் போட்ட அந்த நபர் ஆரவ் ஆக இருக்கலாம். அனிருத்தின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.

ஓம் பிரகாஷின் கேமரா ஒரு த்ரில்லர் படத்துக்கான அடர்த்தியான காட்சிகளை கண்முன் நிறுத்தும் என்று நம்பலாம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்