இலங்கை பாராளுமன்றத்தில் மறைமுகமாக தமிழை ஒழிக்க கடும் நடவடிக்கை!

மறைமுகமாக இலங்கை பாராளுமன்றத்துக்குள் தமிழை ஒழிக்க என் பி பி கட்சியினர் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன! இதற்க்கு உடந்தையாக யாழ் எம்பி வைத்தியர் அர்ச்சுனா மறைமுக ஆதரவை வழங்கி வருவதாகவும் தெரிய வருகிறது தமிழர்களுக்குள் தமிழர்களை முட்டிவிடும் ராஜதந்திரத்தில் என் பி பி ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் பாராளுமன்றத்தில் யாரும் தமிழில் உரை நிகழ்த்தக் கூடாது. இதற்காக என் பி பி கட்சியினர் மறைமுகமாக பாரிய நிதிகளை வைத்தியர் அர்ச்சுனாவுக்கு […]

பரோட்டா சாப்பிட்ட மாணவி மரணம்!

கோவை மாவட்டம் துடியலூர் தொப்பம்பட்டி பிரிவு போர்ட்லண்ட்ஸ் குடியிருப்பில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா வயது 22. தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றிரவு புரோட்டா சாப்பிட்டு தூங்க சென்றார். காலை கீர்த்தனா மயங்கி கிடந்தார். பதறிய பெற்றோர் மகளை கோவை அரசு ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சத்தம் இல்லாமல் ஒரு சம்பவம்…

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் இறுதியாக நேற்றிரவு (28) வெளியானது. “எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என அட்டகாசமான வரிகளுடன் இந்த டீசர் ஹொலிவூட் பட தரத்துக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நடிகர் அஜித் குமார் மற்றும் அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த 2 ஆண்டுகளாக அநேகமான தடைகளை தாண்டி உருவாகி வருகிறது. இந்த […]

மோகன்லாலும் மம்முட்டியும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்!

மாலையாள திரைப்படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பானது நவம்பர் 19 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமானது. இரண்டு தசாப்தங்களின் பின்னர் மோகன்லாலும் மம்முட்டியும் ஒரு படத்தில் இணைந்துள்ளதால் மாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு வரலாற்று தருணம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் இவர்கள் மட்டுமின்றி ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படம் மலையாள திரையுலகின் மிகப்பெரிய படங்களில் […]

ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (29) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 286.31 ரூபாவாகவும், 295.04 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது நேற்றைய தினம் முறையே 286.57 ரூபாவாகவும், 295.58 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு நாணயங்களுக்கு […]

தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய (29) தினம் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 211,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 195,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணானது 209,000 ரூபாவாக, 22 கரட் தங்கம் ஒரு பவுணானது […]

500 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு படகுகள் பறிமுதல்!

இலங்கைக் கொடியுடன் இரண்டு படகுகளில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் பயணித்த குறித்த இரண்டு படகுகளும் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டன. சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மற்றும் இரண்டு படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.