ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை, திடீர் அறிவிப்பு

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ட்விட்டரில் 5 சதவிதம் தவறான/ போலி கணக்குகள் உள்ளன. ஆகையால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஈலோன் மஸ்க் முன்வந்தார். அதனை ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டது. Twitter deal temporarily on […]
ரணில் கடமைகளை பொறுப்பேற்றார்!

பிரதமராக நேற்று மாலை பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, இன்று முற்பகல் பிரதமராக தனது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சுதந்திர இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க கடமைகளை பொறுப்பேற்றார். நாடுகடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதன் காரணமாக கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் மீது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறையையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக நேரிட்டது. […]
ரணில் பதவியேற்றுக் கொண்டா பின் ஜப்பான் 2 பில்லியன், இந்தியா 1.3 பில்லியன் டொலர் இலங்கைக்கு நிதி உதவி

அதாள பாதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதன் அடுத்த நிமிடமே இலங்கையில் பல சாதக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. முதற்கட்டமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த பங்குச் சந்தை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதேவேளை இன்றையதினம் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதே முக்கிய விடயமாக […]
விசா வழங்குவதனை நிறுத்தவில்லை

விசா வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அல்லது இந்திய துணைத்தூதரகம் அல்லது உதவி உயர்ஸ்தானிகராலயமோ, விசா வழங்கும் செயற்பாடுகளை நிறுத்தவில்லையென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]
அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி குறைவடைந்தது!

இன்றைய தினம் உரிமம் பெற்ற பல வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றை 365 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. உரிமம் பெற்ற வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியிருந்தது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 15 ரூபாவினால் குறைவடைந்துள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது. சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, மக்கள் வங்கி, DFCC வங்கி […]
இலங்கை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364 ரூபா 22 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபா 49 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 448 ரூபா 35 சதம். விற்பனை பெறுமதி 467 ரூபா 57 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 403 ரூபா 62 சதம் சுவிஸ் பிராங் […]
மஹிந்த, நாமல் உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித […]