பங்கு சந்தை நடவடிக்கையிலும் முன்னேற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றங்களின் பிரதிபலிப்பாக, வர்த்தகம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி, முதல் ஒரு மணி நேரத்தில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 300 புள்ளிகள் வரை உயர்ந்து 8,000 புள்ளிகளைக் கடந்தது. முன்னணி 20 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ். என் .பி ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் சுமார் 5 வீதத்தால் அதிகரித்து, முதல் வர்த்தக நேரத்தில் 2,600 புள்ளிகளைக் கடந்ததாக கொழும்பு பங்குச் சந்தைத் […]

இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தல் ஆரம்பம்

இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலைத் இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்து வைத்துள்ளது. இது சுற்றாடல் ரீதியாக நிலைபேறான பொருளாதார நடவடிக்கைகளை வரைவிலக்கணம் செய்து வகைப்படுத்துவதுடன் 2019இல் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் நிலைபேறான நிதிக்கான வழிகாட்டலில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய செயற்பாட்டு விடயமொன்றாகக் காணப்படுகின்ற வகைப்படுத்தல் முறைமையொன்றாகும். இந்த வகைப்படுத்தலானது, பன்னாட்டு ரீதியான சிறந்த நடத்தைகளுக்கு இசைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்நாட்டு பின்னணிக்கு ஏற்றவிதத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]

ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15) காலை 5 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து […]

டீசல் அடங்கிய கப்பல் இலங்கை வருகிறது

டீசல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறியப்படுத்தியுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. குறித்த கப்பலை நாளைய (14.05.2022) தினம் நாட்டுக்கு கொண்டு வர முடியாவிட்டால் எதிர்வரும் 17ஆம் திகதி அது நாட்டை வந்தடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா தெரிவித்தார். தற்போது வைத்தியசாலைகள், பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் டீசல் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மாத்திரம் விநியோகிக்கப்படுகிறது. […]

நிதி உதவிகளை வழக்குமாறு சர்வதேசத்திடம் பிரதமர் கோரிக்கை

புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில் விக்ரமசிங்க சர்வதேசத்திடம் மேலும் நிதி உதவியினை வழங்கும்படி கோரியுள்ளார். இலங்கை மக்கள் மூன்று நேர உணவை பெறுவதற்கு தாம் உறுதியளிப்பதாக தெரிவித்துள்ள அவர், பட்டினி பிரச்சினை இலங்கையில் ஏற்படாத வகையில் தாம் உரிய நடவடிக்கையினை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். பதவி ஏற்றதன் பின்னர், பிபிசிக்கு வழங்கிய முதலாவது செவ்வியில் இந்த உறுதியினை அவர் வழங்கியுள்ளார். இலங்கையின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், பழைய நிலைமைக்கு கொண்டு வரும் செயல்பாடு துரிதகதியில் […]

இலங்கையில் மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ்

இலங்கையில் வடமேல் மாகாணத்தின் இரண்டாவது பெரிய தீவான உச்சிமுனை தீவு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரிசார்ட் ஒன்றை உருவாக்க சுவிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த “குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் அதற்காக சுவிஸ் நிறுவனம் இலங்கைக்கு வந்தது. அந்நிறுவனத்தின் மொத்த ஆரம்ப முதலீடு 417 மில்லியன் டொலர்கள்” […]

இரு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, மேற்படி தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]