ஏன் இந்த நிலைமை?!

கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரி வடக்கு மாகாண நிலையத்தில் தொழிற்பயிற்சி பெறுகின்ற மாணவர்களில் 95 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது மிகவும் கவலைக்குரியது. வடக்கு மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களே 95 வீதமானவர்கள் இங்கு தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் தொழிற்பயிற்சியின் பின்னர் பல்வேறு நிறுவனங்களில் தொழில் வாய்ப்பினை பெற்று சென்றுவிடுகின்றனர். பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பினையும் பெற்றுள்ளனர். ஆனால் வடக்கு இளம் சமூகம் இங்கு கற்பதற்கு […]

யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஸ்ய கூலிப் படையில் இணைப்பு!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அங்கு தொழில் நிமித்தமாக செல்ல முயற்சித்துள்ளார்.அந்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் […]

புதிய சபாநாயகரின் தலை அங்கி உரியமுறையுல் பேணப்படாமை..!

இலங்கை பாராளுமன்றத்தின் சபை அமர்வுகளில் சாபாநாயகர் அணியும் தொப்பியின் (தலை அங்கி)இருமுனைகளும் தொங்கும் நிலையில் அணிவதுதான் பாராளுமன்ற மரவும், நடைமுறையும். ஆனால் தேசியமக்கள் சக்தி அரசால் கடந்த 21/11/2024,ல் தெரிவானபுதிய சபாநாயகர் அசோக ரன்வல அணிந்திருந்த தலை அங்கியின் இரண்டு கீழ் முனைகளும் நாடியியை மறைத்து மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் போல் அணியப்பட்டிருந்தது இது தவறான நடைமுறை. அவருக்கு இதனை பாராளுமன்ற வழிகாட்டும் ஊழியர்கள் சொல்லிக்கொடுக்காமல் விட்டிருக்கலாம். இந்த தவறுக்கு புதிய சபாநாநகர் பொறுப்பில்லை புதியவர்களுக்கு வழிகாட்ட […]

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழமுக்கமாக வலுவடையக்கூடும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாகக் கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 […]

கூகுள் மெப் காட்டிய வழியில் பயணித்த மகிழுந்து விபத்து – மூவர் பலி!

கூகுள் மெப்பின் உதவியுடன் இந்தியாவின் பரேலியிலிருந்து பதாவுன் பகுதியை நோக்கிப் பயணித்த மகிழுந்தொன்று ஆற்றில் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், பாலத்தின் சமீபத்திய நிலை GPS-ல் மேம்படுத்தல் (அப்டேட்) செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் குறித்த மகிழுந்தானது பாலத்தின் மீது பயணித்துக்கொண்டிருந்த போது பாலத்தில் கவிழ்ந்துள்ளதாக இந்திய […]

தமிழன்டா என உசுப்பேற்றியது என்னாச்சு? – மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!

10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்புக் கோருவதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். சிங்கள யூடியூப் நிகழ்ச்சியொன்றில் இன்று (23) கலந்து கொண்ட போது அர்ச்சுனா இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்குறித்தனமாக நடந்து கொள்ளும் அர்ச்சுனா, எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து குழப்பம் விளைவித்த சமயத்தில், அர்ச்சுனா பேஸ்புக் நேரலையில் அதனை வெளியிட்டு, தமிழன்டா என குறிப்பிட்டிருந்தார்.

நம்ம ஊர்க்குரல்களின் சமர்!

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது பதிப்பு வருகிற 16ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோ காணொளிகள் பிரபலமாகிவருகிறது. அதேபோல் இலங்கையில் சகோதர மொழியிலும் ‘தி வோய்ஸ்’ எனும் பாடல் போட்டி பிரபலமாக நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. கடந்தாண்டு நிகழ்ந்த போட்டியில் இரு போட்டியாளர்கள் தமிழிலும் சகோதர மொழியிலும் பாடி சமரை சமம் செய்திருந்த காணொளி ஒன்று தற்போது ட்ரண்டிங் ஆகிவருகிறது.