குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கின

“பல அமெரிக்க போர் விமானங்கள் இன்று காலை விபத்துக்குள்ளானன” என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. “பணியாளர்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர், அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். பணியாளர்களின் உடல்நிலை சீராக உள்ளது” என்று அது மேலும் உறுதிப்படுத்துகிறது. “இந்த நிகழ்வுகளின் சூழ்நிலைகள்” குறித்து அறிய அதன் அமெரிக்க கூட்டாளியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், “சம்பவத்திற்கான காரணங்கள்” குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
யாழில். காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை – மூவர் தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்,கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் […]
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; 15 தனியார் ஜெட் விமானங்கள்

பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் உயர்மட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதலைக் காண ஏராளமான சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் 15 சிறப்பு தனியார் ஜெட் விமானங்களில் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோதலின் உலகளாவிய ஈர்ப்பை எடுத்துக்காட்டும் வகையில், பல நாடுகளைச் சேர்ந்த உற்சாகமான ரசிகர்கள் சிறப்பு விமானங்களில் பயணித்ததாக விமான நிலைய […]
மஸ்கின் திட்டம் வெற்றியளித்ததா? இளைஞரின் நெகிழ்ச்சி அனுபவம்!

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் மூளையில் சிப் பொருத்தும் செயற்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் அதன் செயற்பாடுகள் குறித்து பேசியுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த செபாஸ்டியன் கோம்ஸ் பெனா (Sebastian Gomez-Pena) என்ற இளைஞர், நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்பை பொருத்திக் கொண்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து மட்டும் 07 பேர் இந்த சாதனத்தை பொருத்திக் கொண்டனர். செபாஸ்டியன் கோம்ஸ் பெனா (Sebastian Gomez-Pena) விபத்தொன்றில் சிக்கியதில் அவரது கழுத்து பகுதியில் இருந்து கீழ் பகுதி உடல் […]
திடீரென குறைந்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 20,000 குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (30) காலை கொழும்பு தங்க சந்தை நிலவரங்களின்படி, “22 காரட்” தங்கத்தின் விலை 368,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று (29) 386,400 ரூபாயாக பதிவாகியிருந்தது. இதற்கிடையில், நேற்று 420,000 ஆக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று 400,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.
தனிமையில் இருக்கும் பயனர்களுக்காக உருவான அதிரடி செயலி

தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘Are You Dead’ என்ற செயலி சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை இதில் உள்ள விசேட பொத்தானை அழுத்தி, ஒவ்வொரு 02 நாட்களுக்கும் ஒருமுறை உறுதி செய்யலாம். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், பயனர்கள் ஏற்கெனவே பதிந்து வைத்துள்ள நெருக்கமான நபர்களுக்கு தானாகவே முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்படும். வெகுதொலைவில் தனியாக வசிக்கும் இளைஞர்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் […]
இன்றைய ராசி பலன்கள்

மேஷம் இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று காரிய அனுகூலம் கிடைக்கும். […]