முட்டை விலை வேகமாக குறைந்து.

நாட்டின் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபா தொடக்கம் 30 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
காணாமல் போன துணைவேந்தர் ரவீந்தரநாத் எங்கே?

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகினார். கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த […]
முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்.

தமிழரசின் மத்தியகுழுச் செயற்பாடுகளுக்கு தடைவிதியுங்கள் – சிவமோகன் வழக்குத் தாக்கல். கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றைபிறக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சி.சிவமோகன் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஊடாக யாழ் நீதிமன்றில் நேற்றயதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் கடந்த 14 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது […]
அர்ச்சுனாவைச் சந்திப்பதற்காக ஜேர்மன் அன்ரி ஒரு லட்சம் ரூபாவை யூரியூப்பருக்கு கொடுத்து ஏமாந்தாரா?

யாழ்ப்பாணம் மீசாலையைச் சொந்த இடமாகக் கொண்ட தான் யூரியூப்பர் ஒருவருக்கு இலங்கைப் பணத்தில் ஒரு லட்சம் ரூபாவை கொடுத்து ஏமாந்துள்ளதாக ஜேர்மனியில் வசிக்கும் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது ரிக்ரொக் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். மீசாலையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் எதிர்வரும் சில நாட்களில் நடக்கப் போகும் திருவிழாவிற்காக ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணம் வரவுள்ளாராம் குறித்த அன்ரி. அந் நேரத்தில் வைத்தியர் அர்ச்சுனாவை நேரில் சந்தித்து சில விடயங்கள் கதைக்க வேண்டும் […]
அவுஸ்திரேலியாவில் மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற இலங்கையர்.

பிள்ளைகளின் முன்னிலையில், தனது மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற இலங்கைப் பின்னணியுடைய கணவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்று 37 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது ஒரு மிருகத்தனமான மற்றும் கொடூரமான தாக்குதல் என்று நீதிபதி விவரித்தார். விக்டோரியா மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி அமண்டா ஃபொக்ஸ் இன்று (19) இந்த தீர்ப்பை வழங்கினார். 47 வயதான தினுஷ் குரேராவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பரோலுக்கு தகுதி பெறுவார். டிசம்பர் 3, 2022 அன்று மெல்போர்ன் […]
அர்ச்சுனாவின் வேட்டியை உரிந்த ஜேவிபி! நாடாளுமன்றத்துக்குள்ளும் நாகரிகமில்லாமல் பேச்சு…

நாடாளுமன்றத்துக்குள் முறையற்ற விதமாக பேசிய யாழ்ப்பாணம் ஊசி எம்.பி, இராமநாதன் அர்ச்சுனாவின் உரை கன்சார்ட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ள வேண்டிய நகாரிகம், முதிர்ச்சி எதுவுமற்று- தற்குறி போல அர்ச்சுனா நடந்து கொள்வதால்- யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்குள் எழுப்ப முடியாத இக்கட்டான நிலையும் எழுந்துள்ளது. அர்ச்சுனாவின் தற்குறித்தனமான நடத்தை- பேச்சினால்- அவரது உரையை யாரும் கணக்கெடுக்காத நிலைமையேற்பட்டுள்ள சூழலில்- நாடாளுமன்றத்திலும் அவரது நடத்தை காரணமாக “ஒரு மாதிரி“ பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. […]
ஊசி எம்.பி இராமநாதன் அர்ச்சுனா மீது வழக்கு: 100 மில்லியன் இழப்பீடு கோரும் வைத்தியர் சத்தியமூர்த்தி!

தற்குறித்தனமாக பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் யாழ்ப்பாணம் ஊசி எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மானநஸ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். 100 மில்லியன் இழப்பீடு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், பிற வழிகளிலும் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் பொய்யான தகவல்களை அர்ச்சுனா பரப்பி வருகிறார். அண்மையில் வைத்தியசாலைக்குள் நுழைந்து ரௌடித்தனத்தில் ஈடுபட முயன்றபோதும், அதுவும் சத்தியமூர்த்தியால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, வைத்தியர் […]