ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கம் செல்வார்களா?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது சமூக வலைத் தளப்பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கொன்றில் வெளியானது.இதன்போது அங்கு அல்லு அர்ஜுன் வருவதை அறிந்த மக்கள் அவரைப் பார்ப்பதற்காக அங்கு […]
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்!

தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராக உயர்ந்த கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக தனது 65 ஆவது வயதில் காலமானார். பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த கோதண்டராமன் துணை வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் மூலம் பிரபலமடைந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் […]
67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!

அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் மொத்தம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் இறக்குமதியாளர்களினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரிசியின் கையிருப்பில் இருந்து இறக்குமதி வரியாக இலங்கை சுங்கத்துறைக்கு 430 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று (20) வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது, […]
டிக்டோக்கிற்கு தடை விதித்த ஐரோப்பிய நாடு ஒன்று!

சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்கள் தாக்கம் குறித்த அச்சத்துக்கு மத்தியில் அல்பேனிய அரசாங்கம் பிரபல வீடியோ செயலியான டிக்டோக்கிற்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. கடந்த நவம்பரில் சமூக ஊடக முரண்பாட்டினால் வயது பாடசாலை மாணவன் ஒருவனை அவரது சக வகுப்புத் தோழி கத்தியால் குறித்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய எதிர்ப்பு மற்றும் அரசாங்க அமைதியின்மைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உத்தேச தடை உத்தரவானது 2025 ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என்று […]
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் மரணம்.

மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார் இறப்பிற்கான காரணங்கள் இதுவரையில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவியின் இழப்பு அப் பகுதி […]
முட்டை விலை வேகமாக குறைந்து.

நாட்டின் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபா தொடக்கம் 30 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
காணாமல் போன துணைவேந்தர் ரவீந்தரநாத் எங்கே?

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகினார். கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த […]