IMF உடன் விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை!

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நிதியமைச்சு குறித்த நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளது. தேவையான சந்தர்ப்பங்களில் வெளிவிவகார அமைச்சின் உதவியை பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் தொழிநுட்ப ரீதியாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். எனினும் கடந்த தினங்களில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை காரணமாக […]
யாழ். இ.போ.சவின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள்ளே வெளியில் இருந்து வருகின்ற பஸ்கள் உள்நுழையாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. யாழ். சாலையின் செயற்பாடுகள் முடங்கிக் காணப்படுவதால் வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றும் செயற்பாடுகள் முடங்கிக் காணப்படுகின்றன. இதன்காரணமாக பஸ்ஸில் பயணிப்பதற்காக வந்த பொதுமக்கள் பஸ் இல்லாமல் காத்திருப்பதையும், பெரும்பாலானவர்கள் தனியார் பஸ்களைப் பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, […]
அடுத்த வாரம் ஆறு எரிவாயு கப்பல்கள் வருகை

அடுத்த வாரத்தில் மேலும் ஆறு எரிவாயு கப்பல்கள் நாட்டை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதத்தில் எரிவாயு இருப்பு 33,000 மெட்ரிக் தொன்னாக இருக்கும். பொதுமக்களுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக சந்தையில் வெளியிடப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை சுமார் 80,000 ஆக இருந்த போதிலும், தற்போது அதனை 100,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் […]
மைத்திரியின் வீடு ரணிலுக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்ந்த கொழும்பு பேஜெட் வீதியில் அமைந்துள்ள, வீட்டை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், சட்ட நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்து வந்த வீட்டை ஜனாதிபதி […]
மனோ, திகா, ரிஷாட்டுக்கு அமைச்சு பதவி

புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (23 ம் திகதி) பதவியேற்ற நிலையில். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மேலும் 12 அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் தற்போது 18 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 அமைச்சர்கள் மற்றும் 30 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அந்த நாளிதழ் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதுர்டீன் மனோகணேஷன், திகாம்பரம் உள்ளிட்டவர்களோடு ஐக்கிய மக்கள் சக்தியின் […]
QR அமைப்பு வெற்றிகரமாக உள்ளது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (QR) ஊடாக எரிபொருளை வழங்கும் முறை நேற்று நாடளாவிய ரீதியில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோல் நிலையங்களில் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்த முறைமையை விரைவில் தேசிய ரீதியில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர […]
ஜனாதிபதி ரணில் பொலிஸாருக்கு வழங்கிய ஆலோசனை

பாடசாலை மாணவர் போக்குவரத்து வசதிக்கு தேவையான எரிபொருளை நாடு தழுவிய ரீதியில் உள்ள டிப்போக்கள் ஊடாக விநியோகிக்க உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார். கறுப்புச்சந்தையில் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார். நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும்,வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எரிபொருள் நெருக்கடி மற்றும் அடுத்தக்கட்ட […]