ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்ட நடவடிக்கை

விளையாட்டுத் துறைப் பொருளாதாரமாக அடுத்து வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்ட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையுடன் விளையாட்டுத் துறையை இணைக்கும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தில் ‘விளையாட்டுப் பொருள் உற்பத்திக் கிராமம்’ ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் விளையாட்டு உபகரணங்களின் தேவையை நிறைவேற்றுவது இதன் நோக்கம் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

சிறப்புச் செய்திகள்