கொமர்ஷல் வங்கியின் தன்னியக்க பண விநியோக இயந்திர வலையமைப்பு நாடு முழுவதும் ATM இயந்திரங்களையும் பண மீள்சுழற்சி இயந்திரங்களையும் (CRMs) உள்ளடக்கியது. இந்த வலையமைப்பின் ஊடாக இலங்கையர்களின் முக்கிய பண்டிகை காலத்தையும் 2022 புத்தாண்டு வரவேற்பையும் உள்ளடக்கிய டிசம்பர் மாதத்தில் 91.872 பில்லியன் ரூபா விநியோகிக்கப்ட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 31ம் திகதி இந்த வலையமைப்பு ஒரே நாளில் 4.234 பில்லியன்களை விநியோகித்துள்ளது. இது 2021ம் ஆண்டு ஏப்பிரல் 9 மற்றும் பத்தாம் திகதிகளில் ஒரே நாளில் விநியோகிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகும் என இலங்கையின் மிக முக்கிய தனியார் வங்கி அறிவித்துள்ளது. டிசம்பர் 16ல் ஒரு நாளில் இந்த வலையமைப்பு 3 பில்லியனுக்கும் அதிகமான தொகையை விநியோகித்துள்ளது. ஆகக் கூடுதலான தொகைகள் விநியோகிக்கப்பட்ட நாற்களாக டிசம்பர் 10 டிசம்பர் 24 மற்றும் 31ம் திகதிகள் பதிவாகி உள்ளன.
இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் இந்த வலையமைப்பு செலுத்தி வரும் பங்களிப்பை இது துல்லியமாகத் தெளிவுபடுத்துகின்றது. அத்தோடு இந்த வலையமைப்பில் மக்கள் தங்கி இருப்பது அதிகரித்து வருகின்றமையையும் இது புலப்படுத்துகின்றது. கொமர்ஷல் வங்கியின் ATM மற்றும் பண மீள்சுழற்சி இயந்திரங்கள் (CRMs) என்பன 2021 முடிவில் 848.427 பில்லியன்களை விநியோகித்துள்ளன. இது சராசரியாக மாதாந்தம் 70.7 மில்லியன்கள் எனவும் வங்கி அறிவித்துள்ளது.
625 ATM இயந்திரங்களையும் 275 CRM இயந்திரங்களையும் உள்ளடக்கிய கொமர்ஷல் வங்கியின் தன்னியக்க பண விநியோக இயந்திர வலையமைப்பு 2021 டிசம்பரில் 5.3 மில்லியன் கொடுக்கல் வாங்கல்களைக் கையாண்டுள்ளது. இது சராசரியாக தினசரி 170,933 கொடுக்கல் வாங்கல்களாகும். அல்லது ஒரு மணித்தியாலத்துக்கு 7122 கொடுக்கல் வாங்கல்களாகும். டிசம்பர் 24ல் 241,427 செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதுவே இந்த ஆண்டில் ஒரே தினத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆகக் கூடிய அளவான கொடுக்கல் வாங்கல்களாகும்.
இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 11 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கி கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 931 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது: மற்றும் மாலைதீவில் வங்கி பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழு அளவிலான வங்கியாக காணப்படுகின்றது.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com
🛒 Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱