இலங்கையின் வங்கிகளில் அமெரிக்க டொலர்கள் இல்லாததால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிஏற்றுமதித் துறைக்கும் பரவியுள்ளது.சரக்குக் கட்டணங்கள் டொலரில் செலுத்தப்பட வேண்டும் என கப்பல் சேவை நிறுவனங்கள் கோருகின்றன.

தேயிலை மற்றும் இறப்பர் துறைகள் உட்பட முன்னணி ஏற்றுமதியாளர்கள், அமெரிக்கடொ லரில் பணம் செலுத்தினால் மட்டுமே ஏற்றுமதிக்கான அனுமதியை ஏற்பாடு செய்ய முடியும் என்று உத்தியோகபூர்வமாகவும் உத்தியோக பூர்வமற்ற விதத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை , மத்திய வங்கி , கப்பல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலோன் அசோசியேஷன் ஒவ் ஷிப்பிங் ஏஜென்ட் (சி ஏ எஸ் ஏ ) ஆகியவற்றிடம் இந்தப் பிரச்சினையை ஏற்றுமதியாளர்கள் எழுப்பியுள்ளனர்.

நாட்டிற்கு கப்பல்போக்குவரத்து குறைந்துள்ளதால் ஏற்கனவே தாங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க டொ லரில் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் முன்னணி ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்

உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனரென்று தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் சண்டே டைம்ஸிடம் கூறியுள் ளார் .

அதேவேளை நாட்டில் இ ரப்பர் ஏற்றுமதிக்கு நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் இந்த தேவை வந்துள் ள தாகவும் , அமெரிக்கடொ லர் தேவைக்காக கப்பல் வசதிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், ஏற்றுமதியாளர்கள் பிரச்சினைகளில் சிக்குவார்கள் என்று முன்னணிஇ ரப்பர் ஏற்றுமதியாளர் ஒருவர்கூறியுள்ளார் .

ஏற்கனவே சில கப்பல் சேவை நிறுவனங்கள் இந்த தீர்மானம் தொடர்பாக தெரிவித்துள்ளதாகவும், எனவே, இந்த நடவடிக்கை குறித்து தொழில்துறையினர் கவலைப்படுவதாகவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.மீன் மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் உள்ளடங்குகின்றனர் டொ லர் தட்டுப்பாடு காரணமாக, கப்பல் துறை பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாகசிஏ எஸ் ஏ. தெரிவித்துள்ளது.

“வங்கி முறைமையில் தற்போதைய அமெரிக்கடொ லர் பற்றாக்குறையால், பொருட்களுக்கு பணம் அனுப்புவதற்காக, ரூபாயில் சேகரிக் கப்படுவதையும் அமெரிக்க டொ லராக மாற்றுவது கடினமாக உள்ளது. எனவே ஏற்றுமதியாளர்களிடம் சரக்குகளுக்கு அமெரிக்கடொ லர்களில் செலுத்துமாறு கப்பல்சேவை நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றன,” என்று சி ஏ எஸ் ஏ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள்,குறித்துஅதாவது கொழும்பானது ஏற்றுமதிக்கு குறைந்த அளவிலான ஒதுக்கீட்டைகொண்டிருக்கும் பெறும் கப்பல் பாதை என்றும், அதற்குப் பதிலாக எளிதாகவும் தாமதமின்றியும் சேகரித்து அனுப்பக்கூடிய பிராந்தியங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அது எச்சரித்தது.

வாடிக்கையாளருக்கு குறித்த காலக்கெடுவுக்குள் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பொருட்களை அனுப்ப முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. நீண்ட கால அடிப்படையில், இது ஏனைய பிராந்தியங்களுக்கான இட ஒதுக்கீட்டை இழக்க வழிவகுக்கும் மற்றும் இலங்கை ஏற்றுமதிகளும் மோசமாகப் பாதிக்கப்படும்.

“ஒரு மாதத்திற்கு ஏற்றுமதி சரக்குகளின் சராசரி மதிப்பு 100 மில்லியன் அமெரிக்கடொ லர்கள் ஆகும், மேலும் பிரதானகணக்குகளுக்கும் கப்பல் முகவர்களுக்கும் இடையேயான முகவரமைப்பு ஒப்பந்தங்களுக்கு இணங்க, பிரதான கணக்கில் வெளிநாட்டு நிதியைத் தக்கவைத்துக்கொள்வதுடன், பிரதான கணக்குகளுக்கு நிதியை அனுப்புவதும் முக்கியமானதாகும். ,” என்று சி ஏ எஸ் ஏ மேலும் கூறியுள்ளது .

இந்தவிடயங்கள் குறித்து ஏற்றுமதியாளர்கள் தங்கள் கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் ம் அவர்கள் நெருக்கடியைத் தீர்க்க முயற்சிக்கின்றனரெனவும் ஏற்றுமதி அபிவிருத்திச்சபை தலைவர் சுரேஷ் மெண்டிஸ் கூறியதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱