இலங்கையுடனான இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்த இலங்கையில் உள்ள துருக்கி தூதுவர் ஆர்.டிமெற் செக்கசியோக்ளு உறுதியளித்துள்ளார்.
இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரு தரப்பு கலந்துரையாடலில், துருக்கி தலைநகர் அங்காரவில் இருந்து தொலைக்காணொளி மூலம் உரையாற்றியிருந்தார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற போதே துருக்கி தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு வர்த்தக உறவுடன் நேரடி முதலீட்டு நடவடிக்கைகளிலும் எதிர்வரும் வருடங்களில், துருக்கி இணைந்து கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு தரவுக்கமைய துருக்கி – இலங்கை இரு தரப்பு வர்த்தகம் 18 கோடி அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
புதிய துறைகளின் ஊடாக மேலும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புவியியல் ரீதியாக துருக்கி, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் மத்தியில் உள்ளதனால், வர்த்தக வாய்ப்புக்களை மேம்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி, விவசாய உற்பத்திகள், ஆடை தயாரிப்பு, மோட்டார் வாகனங்கள், போக்குவரத்து உபகரணங்கள், கட்டட நிர்மாண பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட வீட்டு பாவனை பொருட்கள் என்பனவற்றின் உற்பத்தியில் சர்வதேச ரீதியாக முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாகும்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com