தந்தையை அடித்துக் கொன்ற மகன்

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

இக்கொலைச் சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவருக்கு வயது 66 .

குடிபோதையில் வந்த மகன் அவரது மனைவியைத் தாக்கிய போது அவரைக் காப்பற்ற முற்பட்ட தந்தையை தடியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய 34 வயது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்