மோடிக்கு இத்தாலிய பிரதமர் வாழ்த்து!

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளை இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அதன்படி இந்தியா – இத்தாலி நாடுகளுக்கு இடையேயான நட்பை வலுப்படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்றும், எம் மக்களின் நலனுக்கான பல்வேறு விஷயங்களிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவோம் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்