கடந்த 4 ஆம் திகதிக்கு முன்னர் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பதிவான சமையல் எரிவாயு கொள்கலன் சார்ந்த வெடிப்புச் சம்பவங்களை மையப்படுத்தியே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளிவ்.கே.எச்.வேகபிட்டியவிடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், இது தொடர்பான அறிவுறுத்தல் தமது நிறுவனத்திற்கு கிடைக்கப் பெறவில்லை என குறிப்பிட்டார்.
நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய சமையல் எரிவாயு கொள்கலன்களின் தரம் ஆராயப்பட்டதன் பின்னர், கடந்த 3 ஆம் திகதி முதல் அந்தந்த நிறுவனங்களினால் விநியோக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஆலோசனையின்படி, புதிய பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டன.
rn
நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய சமையல் எரிவாயு கொள்கலன்களின் தரம் ஆராயப்பட்டதன் பின்னர், கடந்த 3 ஆம் திகதி முதல் அந்தந்த நிறுவனங்களினால் விநியோக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
rn
நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஆலோசனையின்படி, புதிய பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டன.
24 மணிசேவையை வழங்கி வருகிறது யாழில் தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com