எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியாளர்களிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருட்களை கொண்டு செல்வதற்கான கொள்கலன்களுக்கான கட்டணம் 5 மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
இதற்கு முன்னர் துறைமுகத்தில் இருந்து கொழும்பு அல்லது அதனை அண்டிய பகுதிகளுக்கு கொள்கலன் ஒன்றை கொண்டு செல்வதற்கு 10, 000 ரூபா முதல் 12,000 ரூபா வரை கட்டணம் அறவிடப்பட்டது.
எனினும் குறித்த தொகை தற்போது 50, 000 ரூபா வரை அதிகரித்துள்ளது.
பொருட்களுக்கான செலவில் இது தாக்கம் செலுத்துகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொள்கலன் போக்குவரத்தில் ஈடுபடும் தாங்கி ஊர்திகளும் போதுமான அளவு இல்லை.
இதன் காரணமாக துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





