பொருளாதார நெருக்கடி, மட்பாண்ட கைத்தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரம் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்பாண்ட கைத்தொழிலிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் தமது வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழிலில் ஈடுபடுவோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில், நானாட்டான், மடுக்கரை, செம்மண் தீவு கருக்காய் குளம் உள்ளிட்ட பகுதிகளில் மட்பாண்ட கைத்தொழில் முன்னெடுக்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக வர்த்தகர்கள் தங்களிடம் மட்பாண்டங்களை கொள்வனவு செய்வதில்லை என தெரிவித்துள்ளனர்.

தாம் தூர பிரதேசங்களுக்கு இந்த பொருட்களைக் கொண்டு சென்று வழங்குவதால் உற்பத்தி செலவினம் இரட்டிப்பாகின்றது.

இதனால் தமிழர்களின் பாரம்பரிய தொழிலாக கருதப்படும் இந்த மட்பாண்ட கைத்தொழிலை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த தொழிற்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்