இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது.
இதற்கமைய பயறு செய்கையினை மேற்கொள்ளும் குடும்பம் ஒன்றுக்கு 18,000 ரூபா நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.
அதன் இலங்கைக்கான பிரதிநிதி விம்லெம்ரா செரன் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபோகத்தில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளாத காணிகளில் பயறுச் செய்கையை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் பயறு 1,000 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





