கடந்த ஜூன் மாதம் உணவுப் பொருட்களின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் பணவீக்கம் 80.1 சதவீதத்துக்கு அதிகரித்துள்ளது.
இது கடந்த மே மாதம் 57.4 சதவீதமாக காணப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
மீன், காய்கறிகள், பாண், அரிசி மற்றும் பால்மா என்பவற்றின் விலைகள் கடந்த மாதகாலப்பகுதியில் கணிசமாக அதிகரித்துள்ளன.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து, உணவகம், விடுதிகள், வீடமைப்பு, நீர், மின்வலு மற்றும் எரிவாயு உள்ளிட்ட வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக உணவல்லா வகையினுள் உள்ள பொருட்களின் விலைகளும் அதிகரித்து பதிவாகியுள்ளன.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 282





