காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டம் இடம்பெற்ற பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் காவல்துறை உப பரிசோதகர் என தெரிவிக்கப்படுகிறது.

நிட்டம்புவ துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகாிப்பு
காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ போராட்டம் இடம்பெறும் பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 5 உயிரிழந்தனர்.
அத்துடன் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 184 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிரவேசித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களில், அலரிமாளிகைக்கு முன்னால் அமைக்கபட்டிருந்த அமைதிப் போராட்ட கூடாரங்கள் முதலில் உடைக்கப்பட்டன. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலிமுகத்திடலுக்கு பிரவேசித்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியோர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
இதேவேளை, வீரக்கெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் மரணித்தனர். சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நிட்டம்புவ பகுதியில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட அமைதியின்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அவரது பாதுகாவலர் மற்றும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயதான நபருமாக மூவர் இவ்வாறு உயிரிழந்தனர்.
அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, அலரி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக நேற்றிரவு வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அலரிமாளிகையின் நுழைவாயிலுக்கு தீ வைக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அலரிமாளிகையின் வாயில் கதவு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





