தமிழக அரசு, இலங்கைக்கான அரிசி தொடர்பில் அவதூறு

இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள அரிசி தொடர்பாக அவதூறு கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு தயங்காது என தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அ.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 40,000 டன் அரிசியை வழங்குவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளதோடு, இதற்கு அண்மையில் இந்திய மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யக் கூடிய 51 ஆலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில் குறித்த விடயம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தும் கருத்துகள் முன்வைக்கப்படுவதாக தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அ.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், இந்தியாவில் இருந்து ஏலவே இறக்குமதி செய்துள்ள அரிசிக்கு இணையான உயர் ரக அரிசி வகைகளே இவ்வாறு கொள்முதல் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அரிசி 10 கிலோகிராம் அடிப்படையில் பொதி செய்யப்படவுள்ளன.

அவற்றை சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் ஊடாக இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து செலவு மற்றும் பைகளுக்கான செலவு உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு பை ஒன்றுக்கு 33 ரூபா 50 சதம் என்ற அடிப்படையில் கட்டணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிலர் இந்திய உணவு கழகத்திடம் இருந்து கிலோ ஒன்றுக்கு 20 ரூபா செலுத்தி அரிசியை வாங்காமல், அதிக தொகை செலுத்தி அரிசியை கொள்வனவு செய்வதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது தவறான பொய்ப் பிரசாரமாகும்.

மத்திய அரசின் உணவு மானியத்தால் விலை குறைக்கப்பட்டு 20 ரூபா என்ற விலையில் இந்திய உணவுக் கழகம் வழங்கக்கூடிய அரிசியானது, மாநில அரசுகளுக்கு விநியோகிப்பதற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும்.

இதனை மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது.

இதன் காரணமாகவே அரிசி கொள்முதல் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.

எனவே, இந்திய உணவு கழக அரிசியை இலங்கைக்கு அனுப்புவதற்காக கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள உயர் ரக அரிசியுடன் ஒப்பிடுவது தவறாகும் என தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அ.சக்கரபாணி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்