ஜனாதிபதி – அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவுக்கு இடையில் கலந்துரையாடல்

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி செய்வதற்கான, மிகவும் செயற்திறன் வாய்ந்த வழிமுறைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் தூதுக்குழு நேற்று நாட்டை வந்தடைந்தது.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று இடம்பெற்றிருந்த கலந்துரையாடலை தொடர்ந்து தற்பொழுது ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது

நிதி நிர்வாகத்திற்கான தொழில்நுட்ப உதவியை வழங்க அமெரிக்கா இணக்கம்

இலங்கையில் நிதி முகாமைத்துவத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று(26) இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் கெல்லி கெய்டர்லிங் இன்று (27) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.

பேச்சுவார்த்தை

இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜதந்திர குழுவும் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அமெரிக்காவிற்கான ஆசிய திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்