சந்தையில் நிலவும் சீனி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அவசியமான டொலர் ஒதுக்கம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லையென சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய வங்கியின் தலையீட்டை எதிர்பார்ப்பதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில், கொழும்பு துறைமுகத்தில் 200 சீனி கொள்கலன்கள் விடுவிக்கப்படாதுள்ளன.
சீனியை இறக்குமதி செய்வதற்கு அவசியமான 18 மில்லியன் டொலரை, இறக்குமதியாளர்கள் முன்னதாக அரசாங்கத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 54