வவுனியா பூவரசன்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து பெற்றோல் விற்பனை செய்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் வீட்டில் வைத்து பெற்றோல் விற்பனை செய்து வருவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பெற்றோல் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்த பொலிசார் அவரிடமிருந்து பெற்றோல் என்பனவற்றையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





