சட்டவிரோதமாக இறக்குமதிசெய்யப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
வத்தளை சரக்கு களஞ்சியசாலையில் இரு கொள்கலன்களில் இருந்து குறித்த பொருட்கள் மீட்கபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவற்றுள் 40 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,500 மதுபான போத்தல்கள், இயந்திர எண்ணெய், அழகுசாதன பொருட்கள், மஞ்சள் மற்றும் லைட்டர் போன்ற இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





